தேவன் அருளியிருக்கிற ஆராதனையின் ஸ்தானம் Gods Provided Place Of Worship லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா அமெரிக்கா 65-04-25 நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. அன்புள்ள பரலோகப் பிதாவே, இன்றைக்கு இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருப்பதை நாங்கள் நிச்சயமாகவே ஒரு பாக்கியமாகக் கருதுகிறோம், இவர்களுக்கு மத்தியில், விசுவாசிகளுக்கு மத்தியில் உலகத்திலிருந்து அழைக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்ட, தேவனுடைய பிரித்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாகிய, நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த மகத்தான நேரத்தில், எங்களுடைய நேசரின் பிரசன்னமாகுதலைக் குறித்த இந்த மகத்தான எதிர்பார்ப்பின் கீழ், கர்த்தராகிய இயேசு, எந்த நேரத்திலும். எங்களுடைய சந்ததியில் அவர் வருவார் என்று நாங்கள் விசுவாசிக்கின்றபடியால், எங்கள் இருதயத்தில் இதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் இன்றைக்கு அவருக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். அவர் இன்றைக்கு வராவிட்டால், நாளை நாங்கள் இங்கிருந்தால், நாளை நாங்கள் அவரைத் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். 2 அன்புள்ள தேவனே, இந்தக் கூட்டம் ஒரு. ஒரு விசேஷித்த கூட்டமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இது சபையின் முன்னேற்றத்திற்கான ஒரு ஒரு சாதனையை உண்டாக்கும் ஒரு நேரமாயிருப்பதாக, அது நித்தியத்தில் உள்ள உம்முடைய புத்தகங்களில் எழுதப்படும். பிதாவே, நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பலவீனமான முயற்சியையும் ஆசீர்வதியும். நாங்கள் உம்மையல்லாமல் ஒரு முழு தோல்வியடைந்தவர்களாயிருக்கிறோம் என்பதை நாங்கள் உணருகி றோம், ஆகையால் நாங்கள் அதைத் தொடர முடிந்தால், கர்த்தாவே, நாங்கள் உம்மை உடையவர்களாயிருக்க வேண்டும். இதை எங்களுடைய சொந்த மகிமைக்காக நாங்கள் விரும்பவில்லை. உம்முடைய மகிமைக்காக நாங்கள் இதை விரும்புகிறோம். ஏனென்றால் அதுவே எங்களுடைய இருதயத்தின் வாஞ்சையாயுள்ளது, இயேசு தம்முடைய ஜனங்களில் மகிமைப்படுவதைக் காண வேண்டும் என்பதேயாகும். கர்த்தாவே, யுத்தம் மிகவும் கடினமாக இருக்கிற இந்நாளில், அவர்களுடைய விசுவாசத்தை பெலப்படுத்தி, நாங்கள் எங்களுக்கு மத்தியில் இந்த எழுப்புதலுக்காகவும், ஒரு இளைப்பாறுதலுக்காகவும், ஒரு புத்துணர்ச்சிக்காகவும் வந்திருக்கிறோம். நீர் இந்த எல்லாக் காரியங்களையும் எங்களுக்கு அருள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், ஏனென்றால் நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். நீங்கள் உட்காருங்கள். 3 சகோதரன் ஷகாரியன், சகோதரி வியாட் மற்றும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நண்பர்களுக்கும், மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸில் இருப்பதற்காகக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பிற்காக நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன், இந்த மகிமையான இயேசுவைக் குறித்து பிரசங்கிக்க நாம் யாவரும் இன்றைக்கு அதைக் குறித்து அதிகமாக அறிந்துகொள்ள இங்கிருக்கிறோம். நம்முடைய முயற்சிகள்... 4 (யாரோ ஒருவர் சகோதரன் பிரான்ஹாமிடம் ஒலிபெருக்கியைக் குறித்து பேசுகிறார்) ஆம், ஐயா. [ஒலிநாடாவில் காலியிடம்]...இந்த விதமான. இது மிகவும் சிக்கலான ஒரு விவகாரமாகும். இந்தக் காரியம் ஒத்துழைக்க விரும்புகிறதில்லை என்று கூறலாம். [மற்றவர்கள் ஒலிபெருக்கியை எவ்வாறு சரிப்படுத்துவது என்று ஆலோசனை கூறுகின்றனர்.] சரி, அது அந்த விதமாக வேலை செய்யப் போவதில்லை. [ஒலிநாடாவில் காலி இடம்.]...சகோதரன் ஷகாரியன். இப்பொழுது அது சற்று நன்றாகத் தொனிக்கிறது. 5 நான் ஒருவிதமாகச் சிறியவன், ஒரு மெல்லிய குரலை உடையவனாயிருக்கிறேன், ஆனால் இதுவோ கர்த்தரிடத்திலிருந்து வந்த ஒரு மகத்தான பெரிய செய்தி. அதைக் கொண்டு வருவதைத் தடுக்க, சாத்தானிடத்திலிருந்து ஏராளமான எதிர்ப்பு வந்துவிட்டது, ஆனால் நாம் எப்படியும் இங்கு வந்து விடுவோம். இது நம் எல்லோருக்கும் ஒரு மகத்தான வாரமாக இருக்கும் என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். 6 நான் அங்கே உட்கார்ந்து கொண்டு நம்முடைய அருமையான மரித்த சகோதரன் தாமஸ் வியாட், கிறிஸ்துவுக்கு ஒரு மகத்தான ஊழியக்காரராக, இதே பிரசங்க பீடத்திலிருந்து பேசியிருந்தார் என்பதில் சந்தேகமில்லை என்று எத்தனை முறை யோசித்துக் கொண்டிருந்தேன். 7 நான் சகோதரர் வியாட்டை அறிவேன். நான் அவரைச் சந்தித்து அவரோடு பேசும்போது, அவர் எப்பொழுதுமே எனக்கு ஒரு மகத்தான ஊக்கமளிப்பவராக இருந்தார். எனக்கு நினைவிருக்கிறது, ஒரு சிறு பிரசங்கியாராக, அவர் எப்பொழுதுமே...சுகமளிக்கும் செட்டைகள் என்று அழைக்கப்படும், அவருடைய புத்தகம். சுகமளிக்கும் செட்டைகள் என்ற அந்தத் தலைப்பை நான் விரும்புகிறேன். 8 கிறிஸ்துவின் சேவைக்காகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலயத்தில் நாங்கள் இங்கே இருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறோம். தேவன் அவருடைய விதவையை ஆசீர்வதிப்பாராக, ஜனங்களாகிய உங்கள் எல்லோரையும்.. .நிச்சயமாகவே, நீங்கள் அவரையும் கூடக் காணாமல் வருந்துகிறீர்கள் என்பதை நான் அறிவேன். அவர் போய்விட்டார் என்று நான் கேள்விப்பட்டபோது, அவருடைய நிகழ்ச்சி நிரலை நான் காணாமல் வருத்தப்பட்டேன். நான் அந்தக் குரலைக் கேட்க விரும்பினேன். அவர் சற்று வயோதிகமடைந்து கொண்டிருந்தார், ஆனால் அவர் இன்னமும் ஒரு நல்ல பலத்த சத்தத்தை உடையவராயிருந்தார், மேலும்—மேலும் தேவனிடத்திலிருந்து ஒரு செய்தியை உடையவராயிருந்தார். அவருடைய வாழ்க்கை இன்னமும் இங்கே ஜனங்களாகிய உங்களுக்குள் ஜீவனுள்ளதாயிருக்கிறது. ஊழியக் களங்களுக்கு அவர் அனுப்பிய எல்லா குழுக்களையும், மற்றவைகளையும், தாமஸ் வியாட்டின் நிமித்தமாகச் சுவிசேஷம் இன்னமும் முன்னேறிச் செல்கிறது. மரணமோ அல்லது முதுமையோ இல்லாத அந்த மகிமையான தேசத்தில் அவரை நாங்கள் சந்திக்கும் வரையில் அவருடைய ஆத்துமா அமைதியில் இளைப்பாறுவதாக. நம்முடைய நேரம் என்று அழைக்கப்படும் வரையில் அல்லது இயேசுவானவர் நம் எல்லோரையும் பெற்றுக்கொள்ள வரும்போது, அதாவது மகத்தான பொதுவான உயிர்த்தெழுதல் நிகழும் வரையில் நாம் தொடர்ந்து இங்கே இருக்க வேண்டும். 9 இப்பொழுது இன்றிரவு உங்களுக்கு இங்கே ஆராதனை உண்டு என்று நான் நினைக்கிறேன். ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, அதாவது-அதாவது இன்றிரவு உங்களுக்கு இங்கே ஆராதனை உண்டு என்று என்னிடம் கூறப்பட்டது, எனவே நான் முடிந்தளவு துரிதமாக ஆராதனையை முடிக்கவுள்ளேன். 10 ஏனென்றால், எனக்கு இந்த வாரம் திங்கள் இரவு, செவ்வாய் இரவு, புதன் இரவு போன்றவற்றைப் பெற்றுள்ளேன், எனவே கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம். அவர் விரும்பினால், அது அவருடைய சித்தமாய் இருந்தால், நாம் கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிக்கப் போகிறோம், தம்முடைய உயிர்த்தெழுதலின் எல்லா வல்லமையிலும் அவர் நம்மைச் செய்ய அனுமதிப்பார். அவர் என்ன செய்யக் கொடுக்கிறாரோ, அதை நாம் நம்முடைய முழு இருதயத்தோடு செய்ய விரும்புகிறோம். நாம் அவரை விசுவாசித்தால், அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்பதை நான்—நான் அறிவேன். 11 இப்பொழுது நாம் வார்த்தையைத் திறந்து, அதை வாசிப்பதற்கு சற்று முன்பு, நாம் நம்முடைய தலைகளை வணங்கி இப்பொழுது அமைதியாய் இருக்கையில், குழப்பம் தீர்ந்துவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கையில், நான் மீண்டும் அவரிடத்தில் பேச விரும்புகிறேன். சத்துரு, நம்முடைய சத்துரு, ஒவ்வொரு பக்கத்திலும் கிரியை செய்கிறான் என்பதை, எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்திருக்கிறோம் என்பதை, நாம் உணர்கிறோம். ஆனால், பாருங்கள், அதைப் போன்ற காரியங்கள் சம்பவிக்கும்போது, அப்படியே அமைதியாயிருங்கள். அது என்னவென்பதை தேவன் அறிந்திருக்கிறார். பாருங்கள், அப்படியே அமர்ந்திருங்கள், நீங்கள் இப்பொழுது ஒன்றுமே அறியாத ஒரு காரியத்தை அவர் செய்துகொண்டிருக்கலாம். நாம் அவரிடத்தில் பேசுவோம். 12 பிதாவே, நீர் சமுத்திரத்தை அமைதிப்படுத்த, வல்லமையுள்ள கர்த்தராகிய இயேசு, இப்பொழுது தம்முடைய வார்த்தையின் பேரில் நடந்து வந்து, ஒரு புதிய கோளத்தில், அவருடைய வல்லமை மற்றும் வெளிப்படுத்துதல்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துவீர் என்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் அவருடைய வார்த்தையை வாசிக்கையில், இன்றைக்கு அது எங்களுடைய இருதயங்களுக்கு உயிர்ப்பிக்கப்பட்டு, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நாங்கள் அவரை அறிந்துகொள்ளும்படிக்கு இதைக் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 13 இப்பொழுது நீங்கள் உபாகமப் புத்தகத்தைத் திருப்புவீர்களானால் நலமாயிருக்கும். நான் உபாகம் புத்தகத்திலிருந்து, உபாகமம் 16-ம் அதிகாரத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். ஏப்ரல் மாதத்தைக் குறிக்கும், ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினாரே. கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில்... (என்னை மன்னிக்கவும்)...கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக. நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப்பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள்வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்ய வேண்டும். ஏழுநாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; நீ முதல்நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற் காலம்வரைக்கும் வைக்கவேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து, 14 [சபையில் ஒரு குழந்தை அழுகிறது) நமக்கு மீண்டும் ஏதோ ஒரு பிரச்சனை வந்தது போல. என்னால் அதைக் காட்டிலும் அதிக சத்தமாகக் கூச்சலிட முடியும் என்று நான் நம்புகிறேன். ஹூ- ஹு 15 இந்தப் பிற்பகலில் நான் சற்று நேரம் பேச விரும்புவது மிகவும் வினோதமான ஒரு பாடப் பொருளாகும்: தேவன் அருளியிருக்கிற ஆராதனையின் ஸ்தானம். 16 இப்பொழுது, இது வழக்கத்திற்கு மாறானதாக உள்ளது. ஆனால் இதற்கு முன்பு நான் பல முறைகளில் கூறியிருப்பது போல, தேவன் வழக்கமாக வழக்கத்திற்கு மாறான பழக்க வழக்கங்களில், வழக்கத்திற்கு மாறான இடங்களில் வாசம் செய்கிறார் என்றும், வழக்கத்திற்கு மாறான காரியங்களைச் செய்கிறார், ஏனென்றால் அவர் வழக்கத்திற்கு மாறானவர். அவர்மேல் விசுவாசம் உள்ளவர்கள் வழக்கத்திற்கு மாறான முறையில் நடந்து கொள்கின்றனர். அவருடைய வழக்கத்திற்கு மாறான தன்மையைக் குறித்து நாம் அநேக, அநேக காரியங்களைக் கூற விரும்புகிறோம். ஆனால் அவரோடு அறிமுகமான யாவரும், அவர் வழக்கத்திற்கு மாறானவர் என்பதை அறிந்துள்ளனர் என்பதை நான் அறிவேன், வழக்கத்திற்கு மாறான காரியங்களைச் செய்கிறார், சில சமயங்களில் வழக்கத்திற்கு மாறான நேரத்தில் செய்கிறார். எனவே இன்று நாம் தேவன் இவற்றை, இந்த வார்த்தையின் வாசிப்பையும், நான் உங்களோடு பேசத் தெரிந்து கொண்ட பாடப் பொருளையும், ஆசீர்வதிப்பார் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். 17 இப்பொழுது, இங்கே நம்முடைய தொல்லைக்குக் காரணம் என்னவென்று நான் நினைக்கிறேனென்றால், அவர்கள் ஒலிப்பதிவு கருவிகளை அணைத்து விட்டு, ஒலிப்பெருக்கியிலிருந்து மின்சாரத்தை வெளியே இழுத்தனர். எனவே, அவர்கள் அதைச் சரி செய்யவில்லை யென்றால், ஏன், நீங்கள் எப்படியும் நான் கூறுவதைக் கேட்பீர்கள். நாம் கேட்கும்படி தேவன் நம்முடைய செவிகளைப் பொருத்துவார். 18 முழு சுவிசேஷ வர்த்தக புருஷருடைய கூட்டத்தில், நான் இந்தச் பொருளின் பேரில் பேச விரும்புவதற்கும், இதைச் செய்வதற்கு இது ஒரு நல்ல தருணமாயிருப்பதற்கும் காரணம், ஏனென்றால் எல்லா சபைகளும், அல்லது அவைகளில் அநேகம், இந்தக் குழுவில், எல்லா வித்தியாசமான ஸ்தாபனங்களிலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர். "19 நான் அநேக சமயங்களில், ஜனங்களை வீதியில் சந்தித்து, நான் கண்டறிவது, நெடுஞ்சாலைகளிலும், விமானங்களிலும், இரயில் வண்டிகளிலும், பேருந்துகளிலும் செல்லும்போது, நான் அவர்களிடம், “நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?"" என்று கேட்பேன். " "20 அவர்களில் ஒருவர், ""பாருங்கள், நான் மெத்தோடிஸ்டு. நான் பாப்டிஸ்டு. நான் பிரஸ்பிடேரியன். நான் லூத்தரன். பெந்தேகோஸ்தே” அல்லது அந்தவிதமான ஏதோ ஒரு காரியத்தைக் கூறலாம். " 21 ஒவ்வொருவரும் ஒரு ஸ்தாபனத்தை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகின்றனர். ஒரு ஸ்தாபனத்தினால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுவது முற்றிலும் சரியே, ஆனால், அதே சமயத்தில், அதனுடைய மோசமான பாகம், ஒவ்வொருவரும் இந்தக் குறிப்பிட்ட குழு மட்டுமே-பரலோகத்திற்கு செல்லப்போகிற ஒரே குழுவினர் என்று நினைக்கிறார்கள், அது மட்டும்தான்— அதாவது யாரோ ஒருவரின் குறிப்பிட்ட குழுவில் மட்டுமே தேவன் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார். இந்தப் பிற்பகல் அதைத் தீர்த்து வைக்க ஒரு நல்ல நேரமாயிருக்கும் என்று நான் எண்ணினேன். (சபையோர் கைதட்டுகிறார்கள்) ஒரு வேளை அதன் காரணமாகத்தான் சாத்தான் இந்த ஒலிப்பெருக்கியில் தொடர்ந்து தடை செய்கிறான். மனிதன் உண்டாக்குகிற எந்தக் காரியமும் தவறாய்ப்போகும் என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் தேவன் உண்டாக்குகிறவையோ தவறாகப் போவதில்லை. எனவே அதைச் செய்ய இது ஒரு நல்ல வேளையாயுள்ளது, அதைச் செய்ய ஒரு நல்ல இடம், எனவே, அவருடைய கிருபையினால், அதைக் குறித்து பேச எங்களால் முடிந்தளவு நாங்கள் முயற்சி செய்வோம், தேவன் அதற்கு நமக்கு உதவி செய்வாராக. 22 இப்பொழுது இந்தப் பாடப்பகுதி, உபாகம புத்தகத்திலிருந்து வருகிறது. உபாகமம்...நான் இங்கே சில வேத வாக்கியங்களையும் மற்ற காரியங்களையும் எழுதி வைத்திருக்கிறேன் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். 23 நான் அவைகளை உண்மையாகவே வேகமாக நினைத்துப் பார்ப்பது வழக்கம், ஆனால் நான் இருபத்தைந்து வயதை கடந்த பிறகு, இரண்டாம் முறை, அவை எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்வது எனக்குச் சற்று கடினமாக உள்ளது. எனவே, நான் அறைக்குள் சென்று ஜெபிக்கிறேன். அவர் எனக்கு வேதவாக்கியங்களை அளிக்கையில், நான் அவற்றை எழுதி வைத்துக் கொள்கிறேன், அவ்வப்போது அதனுடன் ஒரு குறிப்பை எழுதிக் கொள்வேன், அவர் அதை எனக்கு அளித்தபோது இருந்தவிதமாகவே என்னுடைய சிந்தையை ஒருவிதமாக வைக்க வேண்டும். "24 உபாகமம் என்பது “இரண்டு பிரமாணங்கள்"" என்று பொருள்படும் ஒரு கிரேக்க வார்த்தையாகும், உபாகமம் என்ற வார்த்தை. தேவனுக்கு இரண்டு பிரமாணங்கள் உள்ளன. " "25 அவைகளில் ஒன்று அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போகும் மரணத்தின் பிரமாணமாகும். ஏவாள் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதபோது, அது மரணத்தைக் கொண்டு வந்தது என்பதை நாம் கண்டறிகிறோம். அது, ""நீங்கள் அதைப் புசிக்கும் நாளிலே, நீங்கள் சாவீர்கள்"" என்பது அவருடைய பிரமாணங்களில் ஒன்றாகும். " 26 அதன்பின்னர் அவர் மற்றொரு பிரமாணத்தை உடையவரா யிருக்கிறார், அது கீழ்ப்படிதலுக்கான, ஜீவனின் பிரமாணமாக உள்ளது. நீங்கள் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்யவில்லையென்றால், ஏன், அவருடைய வார்த்தையைக் காத்துக் கொண்டால், நீங்கள் பிழைப்பீர்கள். 27 என்னுடைய சிந்தனை முறைக்கு இரண்டு விஷயங்கள் முக்கியம், அதாவது, அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பது அல்லது அவருடைய வார்த்தையை மீறுவது. 28 இந்தச் பிரமாணங்களில் ஒன்று சீனாய் மலையில் கொடுக்கப்பட்டது. மற்றொன்று...அது மரணத்தின் பிரமாணம். மற்றொரு பிரமாணம் கல்வாரி மலையிலே கொடுக்கப்பட்டது, அங்கே கிறிஸ்து இயேசுவின் மூலமாக ஜீவ பிரமாணம் கொடுக்கப்பட்டது. அவருக்கும் இரண்டு உடன்படிக்கைகள் உள்ளன. "29 அவர் பூமியின் முதல் மனிதனாகிய, ஆதாமுடன் உடன்படிக்கையை உடையவராயிருந்தார். அந்த உடன்படிக்கை, ""நீ இன்ன-இன்னதைச் செய்தால், நான் இன்ன-இன்னதைச் செய்வேன்” என்ற நிபந்தனைகளின் பேரில் இருந்தது. தேவனுக்கு முன்பாக இந்த உடன்படிக்கையை உயிரோடு காத்துக்கொள்ள ஆதாம் ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியதாயிருந்தது. அவன் அவருடைய எல்லா வார்த்தையையும் காத்துக்கொண்டு, ஒரு வார்த்தையையும் மீறாமல் தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டியதாயிருந்தது. " "30 ஆனால் அதன்பின்னர் அவர் மற்றொரு உடன்படிக்கை செய்தார், அது ஆபிரகாமுடன் இருந்தது. இந்த உடன்படிக்கை நிபந்தனைகளின் பேரில் அல்ல, ஆனால் நிபந்தனையற்றதாயிருந்தது. தேவன் ஆபிரகாமுக்கு உடன்படிக்கையை அளித்தார், அதனோடு எந்தக் நிபந்தனையும் கட்டப்படவில்லை. நிபந்தனையற்றது! ""நான் செய்வேன்” என்றல்ல. ""நான் செய்துவிட்டேன்! நான் அதை ஏற்கனவே செய்துவிட்டேன்” என்பதாகும். " 31 அந்தப் பிரமாணத்தின்படியே கிறிஸ்தவர்கள் வாழ வேண்டும். நாம் நமக்காக என்ன செய்கிறோம் என்பதல்ல, ஆனால் அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதேயாகும். கிறிஸ்து ஏற்கனவே பலியிடப் பட்டிருக்கிறார். “அவர் பலியிடப்படுவார்” என்றல்ல. அவர் அவ்வாறு இருந்து வருகிறாரே! அது ஒரு முடிவுற்ற பொருளாகும். அவர் ஜீவித்து, மரித்து, மீண்டும் உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு ஏறி, பரிசுத்த ஆவியின் ரூபத்தில் திரும்பி வந்திருக்கிறார். எனவே, அது தேவனோடு ஒரு முடிவுற்ற கிரியையாய் உள்ளது. கிறிஸ்து பாவம் அறியாதவராய், நான் அவருடைய ஸ்தானத்தில் நிற்கும்படியாக, என்னுடைய பாவமானார், அவர் என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். அவர் மரித்தபோது, நான் அவருக்குள், கல்வாரியில் இருந்தேன். நான் ஜீவிக்க, அவரோடு மரிக்க வேண்டும். பாவம் மற்றும் மரணத்தின் பிரமாணம் சரீரத்தில் இருப்பதால், நீங்கள் அவரோடு ஒப்புரவாக்கப்பட மரிக்க வேண்டும். 32 ஆனால் இப்போது நாம் பயன்படுத்தக்கூடிய இந்த எல்லா வார்த்தைகளையும், இந்தச் சிறந்த பாடப்பகுதிகளையும், வேத வாக்கியங்களின் மகத்தான மாதிரிகளையும், நாம் அனைவரும் அவற்றில் பலவற்றை நன்கு அறிந்திருக்கிறோம். ஆனால், இந்தப் பிற்பகலில், நாம் இதை எதிர்கொள்கிறோம், அதாவது, இவை எல்லாவற்றின் மத்தியிலும், அவர் உங்களைச் சந்திக்க ஒரே ஒரு இடம் மாத்திரமே உண்டு, நம்முடைய பல்வேறு கோட்பாடுகள் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். நாம் யூத மார்க்கத்தை உடையவர் களாயிருந்தோம். நாம் முகமதிய மார்க்கத்தைக் கொண்டிருந்தோம். நாம்.. நாம் எல்லாவிதமான கோட்பாடுகளையும், ஸ்தாபனங்களையும், சபைகள் போன்றவற்றையும் பெற்றிருந்தோம், ஆனால் அதே சமயத்தில் தேவன் உங்களைச் சந்திப்பார் என்று ஒரே ஒரு ஸ்தானத்தில் மாத்திரமே கூறினார். அந்த எல்லா இடங்களிலும், ஒவ்வொருவரும், “அவர் என்னுடைய சபையில் சந்திக்கிறார். நீங்கள் என்னுடைய சபையைச் சார்ந்திருக்கவில்லையென்றால், அவர்—அவர் உங்களைச் சந்திக்க மாட்டார். நீங்கள், நீங்கள் இந்தக் குழுவில் இருக்க வேண்டும் இல்லையென்றால் அவர்— இல்லையென்றால் அவர் உங்களை அங்கே சந்திக்கமாட்டார். இல்லையென்றால், அவர் உங்களை அங்கே தவிர வேறு எங்கும் சந்திக்கமாட்டார்” என்று கூறுகிறார்கள். "33 அதன்பின்னர் அவருக்கு ஒரே ஒரு ஸ்தானம், ஒரே ஒரு ஸ்தானம் மாத்திரமே உண்டு என்பதை நாம் இங்கே கண்டறிகிறோம். ""உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், நீ பலியைச் செலுத்தக்கடவாய்."" இப்பொழுது அவர் ஆராதிக்கும் பிள்ளைகளைச் சந்திக்கும்படியான ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட ஸ்தானத்தை உடையவராயிருக்கிறார், அவர்கள் அந்த ஒரு ஸ்தானத்தைத் தவிர வேறு எங்கும் பலி செலுத்த கூடாது. வேறெந்த ஸ்தானமும் கிரியை செய்யாது. அவர் அவர்களைச் சந்திப்பார் என்ற ஒரு குறிப்பிட்ட ஸ்தானம் அவருக்கு இருந்தது. ஒரு ஸ்தானத்தில், தனியாக, அவர் தொழுதுகொள்பவரை சந்திக்கிறார். " 34 அப்படியானால், அது உண்மையானால், நாம் அந்த ஸ்தானத்தைக் கண்டறிய மிகுந்த கவனமாயிருப்பது நல்லது. நாம் மரித்துக் கொண்டிருக்கிறோம் என்றும், ஒரு மரித்துக் கொண்டிருக்கிற இனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்த மக்களாக, ஒரு மரிக்கிற காலத்தில் ஜீவித்து, ஒரு மரித்துக்கொண்டிருக்கிற தேசத்தில், மரணத்தின் கொடியின் கீழ் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், அதாவது, இது நமக்குப் மிகவும் பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன். 35 இந்த உலகம் சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது நீண்ட காலம் நீடிக்க முடியாது. பாவம் மிகவும் ஆழமானது. அது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. உலகத்திற்கு இனிமேல் நம்பிக்கையே கிடையாது. அது அதைக் கடந்துவிட்டது. 36 பரிசுத்த ஆவியானவர் வயல்வெளிகளில் பொறுக்கிக் கொண்டு, இந்த ஒன்றையும், அந்த ஒன்றையும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். சுவிசேஷம் ஒவ்வொரு தேசத்திற்கும் பிரசங்கிக்கப்பட்டுள்ளது, கொள்கைகளும் காரியங்களும் அதைத் தொடர்ந்து வந்தன, ஆனால் அதே சமயத்தில் சுவிசேஷமோ அதேவிதமாகவே சென்றுள்ளது. 37 இப்பொழுது, கடைசி காலத்தில், காரியங்கள் உள்ளவிதமாகச் சம்பவிக்கிறதை நாம் காண்கிறோம், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களுக்கு மத்தியில் எது சரியானது என்பதைக் கண்டறியும்படியான ஒரு மகத்தான எச்சரிக்கை உள்ளது. நாம் அதை அறிந்துகொள்ள வேண்டியதாயுள்ளது. இப்பொழுது, யாரோ ஒருவருடைய கோட்பாடல்ல, ஆனால் சத்தியம் என்னவென்பதையும், வேதம் என்ன கூறுகிறதோ அது சத்தியம் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இந்நாட்களில் ஒன்றில், நமக்கு மிகவும் காலதாமதமாகிவிடும், இந்த நாளாக அது இருக்கலாம், எனவே தேவன் என்ன கூறியிருக்கிறார் என்பதை நாம் உண்மையாகவே சிந்தித்துப் பார்ப்போமாக. "38 நினைவிருக்கட்டும், தேவன் ஒரு வார்த்தையைப் பேசும்போது, அவரால் அதை ஒருபோதும் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது. அவர் எப்பொழுதும் மாறாதவராயிருக்க வேண்டும். அவரால் ஒருபோதும் ஏதோ ஒரு காரியத்தைக் கூறிவிட்டு, அதன்பின்னர் ""பாருங்கள், நான்—நான் அதைச் சரியாகப் பொருட்படுத்திக் கூறவில்லை” என்று கூற முடியாது. பாருங்கள், அவர் முடிவற்றவர். அவர் துவக்கத்திலேயே, மிகச் சிறந்ததை அறிந்திருக்கிறார். சிறந்ததென்று நாம் கருதும் காரியங்களை நாம் கூறி, சிறிது நேரம் கழித்து நாம் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். ஆனால் தேவனால் அவ்வாறு செய்து, தேவனாகவே தரித்திருக்க முடியாது. எனவே அவர் முடிவற்றவராயிருந்தால், அவர்—அவர் அதைச் செய்கிறதில்லை, ஏனென்றால் அவர் ஒவ்வொரு வார்த்தையிலும் பரிபூரணமாய் இருக்கிறார். அது நித்தியமாயிருந்தாலொழிய அவர் ஒருபோதும் ஒரு வார்த்தையையும் உரைப்பதில்லை. அவருடைய நித்தியமானவை யாவும் துவக்கத்தில் அவரோடு இருந்தன, அவருடைய சிந்தனைகள், அவருடைய தன்மைகள், அவர்கள் தங்களை இன்றைக்கு உலகத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். " 39 இப்பொழுது, நினைவிருக்கட்டும், அவர் விசுவாசிக்கும் பிள்ளைகளைச் சந்திக்கும்படியான ஒரு ஸ்தானத்தை, தனியாக ஒரு ஸ்தானத்தை அவர் அளித்துள்ளார். வேறு எங்கும் கிரியை செய்யாது. "40 நினைவிருக்கட்டும், இயேசு இங்கே பூமியில் இருந்தபோது, மிகவும் பக்தியுள்ள, மிக அருமையான, மிகவும் நாகரீகமுள்ள, மிகவும் வைராக்கியமுள்ள ஜனங்களாய், தேவனைக் குறித்து, ஒரு கூட்ட ஜனங்களிடத்தில் பேசினார், ஆனால் இயேசு அவர்களிடத்தில், ""நீங்கள் வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறீர்கள்"" என்று கூறி. மனுஷனுடைய பாரம்பரியங்களை அவர்களுடைய உபதேசங்களாகப் போதிக்கிறீர்கள் என்று இயேசு கூறினார். அந்த ஜனங்கள் எவ்வளவு பக்தியுள்ளவர்களாயிருந்தனர் என்றும், எவ்வளவு தேவனுடைய வைராக்கியம் கொண்டவர்களாயிருந்தனர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இன்றைக்கோ அல்லது அந்த நாளிலோ அதிக வைராக்கியம் கொண்டிருந்த ஜனங்களை நாம் கணக்கிட்டுப் பார்ப்போமானால், அவர்கள் நம்மைக் காட்டிலும் அதிக வைராக்கியமுள்ளவர்களாயிருந்திருப்பார்கள். இன்னும் அதிகமாகவே! அது பாரம்பரியங்களையும், பிரமாணங்களையும், மற்றக் காரியங்களையும் கைக்கொள்ளும்படி வந்தபோது, அவர்கள் அவைகளின்படியே வாழ்ந்தனர். அவர்கள் தேவனைக் குறித்து மிகுந்த வைராக்கியமுள்ளவர்களாயிருந்தனர் அவர்கள் தேவனை விசுவாசித்தனர். ஆனால் இயேசுவோ, தேவன் நமக்கு மத்தியில் மாம்சமாகி, “நீங்கள் வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறீர்கள்” என்றார். இப்பொழுது, அவர்கள் அவரை ஆராதிக்கவில்லை என்று அவர் கூறவில்லை. அவர்கள் அவரைத் ஆராதித்துக் கொண்டிருந்தனர், ஆனாலும் வீணாயிருந்தது. " 41 எனவே வீணான எந்தக் காரியமும், பயனற்றதாய், எந்த நன்மையும் செய்கிறதில்லை. நீங்கள் அதை ஒருபோதும் செய்யக் கூடாது, ஏனென்றால் நீங்கள் உங்களுடைய நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்துகொள்ளும் வரையில், நீங்கள் உங்களுடைய சுவாசத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் உங்களுடைய முயற்சிகளை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். "42 நிச்சயமாகவே, இயேசு கூறினதுபோல, ஜனங்கள் பரிபூரணமாயிருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறாரானால், “ஆகையால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.” எங்காவது ஆயத்தமாயிருக்க வேண்டும். மேலும் அவர், ""ஜனங்கள் என்னைத் தொழுதுகொள்ளும்படியான ஸ்தானத்தை நான் தெரிந்து கொள்வேன். வேறெந்த ஸ்தானத்திலும் நான் அவர்களைச் சந்திக்கமாட்டேன்"" என்றார். இப்பொழுது, அது அந்த ஸ்தானமாகத்தான் இருக்க வேண்டும், நாம் அதைத் தேட வேண்டும். அது எங்கே உள்ளது என்று கண்டறிந்து, அதன்பின்னர் அங்குச் செல்லுங்கள். மற்ற காரியங்களைத் தனியே விட்டுவிட்டு, நாம் அந்த ஸ்தானத்தைக் கண்டறியும்போது, நாம் துரிதமாக அங்கே திரும்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன். " 43 இப்பொழுது, நான் மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிற அதே வேதவாக்கியத்தில் இயேசு கூறினார் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அப்பொழுது மனிதனுடைய பாரம்பரியம் வீணாகும். நாம் அதனோடு ஒருபோதும் தொடர்பு வைத்திருக்கக் கூடாது. நாம் வரும்படியாகவும் ஆராதனையானது ஏற்றுக்கொள்ளப்படும்படியாக, எங்காவது இருக்க வேண்டிய, ஒரு ஸ்தானத்தை அவர் நமக்காக அருளியிருக்கிறார். இப்பொழுது நினைவிருக்கட்டும், அந்தத் தெரிந்து கொள்ளப்பட்ட ஸ்தானத்திற்கு வெளியே, நீங்கள் எவ்வளவு உத்தமமாய் இருந்தாலும், நீங்கள் எவ்வளவு அடிப்படையானவர்களாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, நீங்கள் இன்னமும் வீணாய் ஆராதித்துக் கொண்டிருக்கிறீர்கள். 44 அது அநாகரீகமாகத் தென்படுகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் கட்டிடம் ஏறக்குறைய முடிந்து விட்டது, அது அசைவதை நாம் விரும்புகிறதில்லை. நாம் அதைச் சுவிசேஷத்தோடு இணைத்து விளக்குவோம், எனவே ஜனங்கள் உங்களைத் தெருவில் சந்திக்கும்போது, அல்லது கிறிஸ்தவர்களாகிய நீங்கள், நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் அவர்களுக்கான ஒரு பதில் உங்களிடம் இருக்கும். "45 அவர்கள், ""ஓ, இது தான் அது. இவைகள் இதைச் செய்வதையும், அவைகள் அதைச் செய்வதையும் நான் கண்டேன்"" என்று கூறிக் கொண்டிருக்கும் நேரத்திலே. நிச்சயமாகவே, இந்த எல்லாக் காரியங்களும் சம்பவிக்கத்தான் வேண்டும். ஆனால் தேவனால் மாத்திரமே அளிக்கப்பட்ட ஒரு ஸ்தானம் உண்டு, அந்த ஸ்தானத்தில் தான் ஆராதிப்பவனை தேவன் தனியாக, சந்திக்கிறார். " "46 2-ம் வசனத்தைக் கவனியுங்கள், “நான் தெரிந்துகொண்ட ஸ்தானத்தில் ஆராதியுங்கள்."" எதைத் தெரிந்து கொண்டார்? எல்லா ஜனங்களும் ஆராதிக்கும் ஒரு ஸ்தானத்தை அவர் உடையவரா யிருக்கிறார் என்பதை இந்த ஸ்தானம் காண்பிக்கிறது. மற்ற ஸ்தானங்கள் வீணாயிருக்கின்றன. ""இதே ஸ்தானத்தில்” என்று அவர் கூறினார், ""நானும் இந்த ஸ்தானத்தில் என் நாமத்தைத் தரிப்பிக்கும்படி தெரிந்து கொண்டேன். நான் ஒரு ஸ்தானத்தைத் தெரிந்துகொண்டு, அவன் தொழுதுகொள்ளப்போகும் இந்த ஸ்தானத்தில் என்னுடைய நாமத்தை அதில் தரிப்பேன்"" என்றேன். " 47 இப்பொழுது, ஒரே ஒரு ஸ்தானம், ஒரேயொரு ஸ்தானம் உண்டு என்பதை இது காண்பிக்கிறது. அது தேவனுடைய தெரிந்து கொள்ளுதலாய் இருக்க வேண்டும்; அது நம்முடையதாக இருக்க முடியாது. வருவதற்கு நமக்கு வேறு வழியில்லை; அவர் ஏற்கனவே அதைத் தெரிந்துகொண்டார். இப்பொழுது, தேவன் சரியானதை தெரிந்துகொள்கிறார். என்னால் தவறாகத் தெரிந்துகொள்ள முடியும், நீங்கள் தவறாகத் தெரிந்துகொள்ளலாம், ஆனால் தேவனால் தவறாகத் தெரிந்துகொள்ள முடியாது. சரியாகத் தேர்ந்தெடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒருவரே ஆராதிக்கப்படுகிறார். தம்மைத் தொழுதுகொள்பவர்கள் அங்கே சந்திக்க வேண்டும் என்று அவர் விரும்புகிற அந்த ஸ்தானத்தை அவர் தெரிந்து கொண்டிருக்கிறார், நாம் அவரை அங்கே சந்திக்க வேண்டும். அந்த ஸ்தானத்தில் மாத்திரமே அவர் தரித்திருக்கிறார்; நீங்கள் பேசுவதை அவர் கேட்கும் ஒரே ஸ்தானம் அதுதான். 48 “என்னை ஆராதிக்கும்படி நான் தெரிந்து கொண்டிருக்கிற ஸ்தானத்தில், என் நாமத்தை அந்த ஸ்தானத்தில் தரிப்பிப்பேன்” என்பதை நாம் இங்கே கவனிப்போமாக. 49 ஓ, இப்பொழுது நாம் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து, அவருடைய நாமத்தை எந்த ஸ்தானத்தில் தரிப்பித்திருக்கிறார் என்று பார்ப்போமாக. வேதாகமம் முழுவதிலும், அவர் ஜனங்களைச் சந்தித்த பல்வேறுபட்ட ஸ்தானங்களின் நிழல்களும், மாதிரிகளும் நமக்கு உண்டு, ஆனால் அந்த ஸ்தானத்தில் அவர் இன்றைக்கு அவர்களைச் சந்திப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் ஏதோ ஒரு காரியத்தை மாத்திரமே முன்னறிவித்துக் கொண்டிருந்தனர், அவர் ஜனங்களைச் சந்திக்க வேண்டிய உண்மையான ஸ்தானத்திற்கு, ஸ்தானத்தில், அவர் சந்திக்க வேண்டிய சபைக்கு வந்து கொண்டிருக்கிறார். தேவன் இந்த ஸ்தானத்த்தில் ஜனங்களைச் சந்தித்து அவர்களுடைய ஜெபங்களுக்கு பதிலளிப்பதாக வாக்களித்துள்ள ஒரு ஸ்தானம் உண்டு, ஒரு சபை உண்டு, அவர்கள் இந்த ஸ்தானத்திற்கு வந்து அவரைத் தொழுது கொள்வார்களானால் நலமாயிருக்கும். "50 இப்பொழுது அநேகர் தங்களுடைய ஸ்தானத்தில் தேவனுடைய நாமம் உள்ளது என்று உரிமை கோருகின்றனர் என்பதை நாம் கண்டறிகிறோம். ஆனால், நீங்கள் பாருங்கள், அவர்கள் தேவனுடைய நாமத்தை அங்கே தரித்துள்ளனர். தேவன் தம்முடைய நாமத்தை அங்கே தரிப்பதற்கும், யாரோ ஒருவர் அங்கே அவருடைய நாமத்தை அங்கே தரிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பார்த்தீர்களா? தேவன் தரிப்பார் என்று, அவர் கூறினார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ""நான் என் நாமத்தைத் தரித்திருக்கிறேன். நான் இந்த ஸ்தானத்தில் என் நாமத்தைத் தரிப்பேன். அந்த ஸ்தானத்தைத்தான் நான் தெரிந்துகொண்டேன், ஜனங்கள் ஆராதிக்க வேண்டும் என்று தெரிந்துகொண்டேன்” என்றார். " 51 இது, இந்த நேரத்தின் நிழல்களின் பார்வைக்கு நம்மை இப்பொழுது கொண்டு வருகிறது, இது கிறிஸ்துவின் பார்வைக்கு நம்மைக் கொண்டு வருகிறது. பழைய ஏற்பாடு முழுவதும் இயேசுவுக்கு முன் நிழலிட்டப்பட்டது. எகிப்தில், அன்றிரவு ஜனங்களின் பாதுகாப்பிற்காக ஒரு-ஒரு ஆட்டுக்குட்டி கொல்லப்பட்டபோது, தேவனுக்கு ஒரு ஸ்தானம், ஒரு நிபந்தனை இருந்தது என்பதை நாம் தெளிவாக உணருகிறோம். எவ்வளவு இளைஞனாக இருந்தாலும், எவ்வளவு வயதான ஒரு ஆசாரியனாக இருந்தாலும் சரி, நீங்கள் என்னவாயிருந்தாலும் சரி, நீங்கள் இந்தக் குறிப்பிட்ட ஸ்தானத்தில் இருக்க வேண்டும். அந்த ஸ்தானத்திற்கு வெளியே இருந்த யாவரும் அழிந்து போயினர். நீங்கள் இந்த ஒரு ஸ்தானத்தில், அவர் அளித்த ஒரு ஸ்தானத்தில் இருக்க வேண்டும். 52 இப்பொழுது, இந்தப் பிற்பகலில், நாம் அதை விளக்குவதில் நாம் அதிக நேரம் செலவிடலாம், கிறிஸ்து எப்படி முன்நிழலாய் காட்சியளித்தார் என்பதை நாம் ஏற்கனவே அறிந்துள்ளதை மறுபரிசீலனை செய்வதாய் அது இருக்கும். பலியிடப்படும் ஆட்டுக்குட்டியானவர் எப்படி காக்கப்பட வேண்டும், பழுதற்ற ஆணாக, அது எப்படி மூப்பர்களால் கொல்லப்பட வேண்டும், எப்படி இரத்தம் வாசலின் மேல் தெளிக்கப்பட வேண்டும் என்பதையும், கிறிஸ்துவின் வருகைக்கு முன்னடையாளமாகக் காண்பிக்க வேண்டும். இந்தச் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் தேவன் அந்த ஸ்தானத்திலேயே ஆராதிப்பவனை சந்தித்தார், அப்பொழுது மரண தூதன் தேசத்தினூடாகக் கடந்து சென்றான். "53 இந்நாட்களில் ஒன்றில் நாம் எகிப்திலிருந்து புறப்பட்டு, இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்ல ஆயத்தமாயிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். நாம் சரியான ஸ்தானத்திற்கு வந்து, இங்கே, ""நான் பிரஸ்பிடேரியன். நான் மெத்தோடிஸ்டு. நான் பாப்டிஸ்டு. நான்தான் இது. நான் அது அல்லது மற்றது"" என்ற இந்த வம்புகளை விட்டு விட வேண்டும். அதிலிருந்து வெளியே வந்து, இந்த ஸ்தானம் எங்கேயிருக்கிறது என்பதைக் கண்டறியுங்கள், ஏனென்றால் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஸ்தானத்தைத் தவிர எல்லாவிடங்களிலும் மரணம் உண்டு. நாம் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட ஸ்தானத்தில் இல்லாவிட்டால், உலகத்தைப் போலவே மரணமும் நிச்சயம் தாக்கும். ஆனால் அவர் தெரிந்துகொள்ளுகிற ஸ்தானத்தில் மரணம் வர முடியாது. " 54 பலியிடப்படும் ஆட்டுக்குட்டியை நீங்கள் கவனிப்பீர்களேயானால், அங்கே மரணம் ஏற்கனவே வந்தடைந்திருந்தது. ஆட்டுக்குட்டி மரித்திருந்த காரணத்தால் மரணம் இந்த இடத்திற்கு வந்திருந்தது. மரணம் ஏற்கனவே வந்து விட்டது. ஆகையால் எங்கே மரணம் வந்து கொண்டிருந்ததோ, அப்பொழுது அது அவருடைய ஸ்தானமாய் இருக்கும் என்று தேவன் வாக்குப்பண்ணினார். அதன்பின்னர், அவருடைய பார்வையில், பலி செலுத்தப்பட்ட ஆட்டுக்குட்டி என்னவாயிருந்தது என்றும், அந்த நேரத்தில் ஜீவனின் ஸ்தானம் என்னவாயிருந்தது என்பதையும் நாம் இப்பொழுது பார்க்கிறோம். "55 இப்பொழுது, எனக்கு, இது எல்லா வாதங்களையும் கண்டனம் செய்கிறது. கிறிஸ்து பார்வையில் இருக்க, பலிக்குரிய ஆட்டுக்குட்டியாக இருக்க, அப்பொழுது அது எல்லா ஸ்தாபனங்களையும், எல்லா பிரமாணங்களையும், எல்லா கோட்பாடுகளையும், எல்லா சபை பிரமாணங்களையும் கண்டனம் செய்கிறது. அது முழு காரியத்தையும் கண்டனம் செய்கிறது. அது உண்மை, ஏனென்றால் நாம் இங்கே, அவருடைய பார்வையில் கண்டறிகிறோம், ஏனென்றால் அவர் கலப்படமற்ற சுத்தமான தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார். பரிசுத்த யோவான் 1, ""ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்"" என்று கூறியுள்ளது. ஆகையால் அவர் மாமிசத்தில் உண்டாக்கப்பட்டு, வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய கலப்படமற்ற வார்த்தையாய் இருக்கிறார். " 56 இதைக் காணும்போது, இன்றைக்கு உலகத்தில் உள்ள எந்தச் சபையோடும், எந்த ஸ்தாபனத்தோடும் நாம் இதை இணைக்க முடியாது. அதைப் போன்ற எந்த ஸ்தானத்திலும் நாம் அதை இணைக்க முடியாது, ஏனென்றால் அது அவ்வண்ணமாய் இல்லை. நாம் கிறிஸ்துவின் நாமத்தை ஒரு கட்டிடத்தின் மேல் வைத்து, அதை “கிறிஸ்துவின்” சபைகள் என்றும், இது, அந்த அல்லது மற்றது என்றும் அழைக்கிறோம். அது அவ்வண்ணமாய் உண்டாகிறதில்லை. அதுவே அதைச் செய்கிறதில்லை. ஆனால் தேவன் தம்முடைய நாமத்தை ஒரு காரியத்தில் தரிப்பிக்கும்போது, அதுதான் அதைச் செய்கிறது. "57 இப்பொழுது, பாபிலோனைத் தவிர, நம்முடைய நவீன ஸ்தாபனங்களின் மாதிரியைக் காண்பிக்கும் எதுவும் வேதத்தில் வேறெங்கும் இல்லை. நம்முடைய நவீன ஸ்தாபனத்தின், ஸ்தாபன மார்க்கத்தின், வேதாகமத்தில் உள்ள ஒரே மாதிரியாகும், ஏனென்றால் அது நிம்ரோத்தினால் ஸ்தாபிக்கப்பட்டு, மத ஜனங்களுக்கிடையில் ஒரு கட்டாய ஐக்கியம் உண்டானது. இன்றைக்கு அதைத்தான் கோட்பாடுகளும், நம்முடைய ஸ்தாபனங்களும் செய்கின்றன, ""ஒன்று நீங்கள் இதைச் சேர்ந்திருக்க வேண்டும் அல்லது நீங்கள் வெளியே இருக்கிறீர்கள்!"" இப்பொழுது நாம் பார்க்க முடிகிறபடி, எல்லாரையும் அதன் ஒரு மகத்தான ஐக்கியத்திற்குள்ளாகப் பலவந்தம்பண்ணும்படிக்கு நாம் வரப்போகிறோம். ஆனால் அது ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு இயந்திரமுறை ஆலோசனையாகும், எனவே அது நிலைத்திருக்க முடியாது. அது தேவனுடைய சித்தமல்ல. அது தேவனுடைய திட்டம் அல்ல. ஜனங்கள் அதை எப்படி கூற முயற்சித்தாலும், அது அப்படி அல்ல. அது இருக்க முடியாது. அது சாத்தியமற்றது. அவருடைய வார்த்தையை மறுதலிக்கிற அப்படிப்பட்ட ஒரு காரியத்தில் தேவன் அவருடைய நாமத்தைத் தரிப்பிக்கமாட்டார். தம்முடைய சொந்த வார்த்தையை மறுதலிக்கும் ஏதோ ஒரு காரியத்தில் எப்படி தேவனால் ஜீவிக்க முடியும்? அவரால் அதைச் செய்ய முடியாது. " 58 எனவே அது எந்தச் சபையோடும் இணைந்திருக்கவில்லை என்பதை, நாம் கண்டறிகிறோம், மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தேகோஸ்தே, கத்தோலிக்கம், கிரேக்க வைதீக சபை, அது என்னவாயிருந்தாலும் சரி. அது இன்னமும், தேவனுடைய ஆராதனை ஸ்தானமாக இருக்கவில்லை. 59 இப்பொழுது இந்த வாக்குத்தத்தத்தை செய்த தேவன் வந்து, அது சரியென்று நிரூபிக்கட்டும். அந்தவிதமாகத்தான் அதைச் செய்ய வேண்டும். அவர் இன்னமும் தேவனாயிருந்தால், அவர் இன்னமும் தேவனாகவே இருக்கிறார்! அவர் எப்போதாவது தேவனாயிருந்தால், அவர் தேவனாகவே இருக்கிறார்! "60 இப்பொழுது இந்தப் பலவந்த மார்க்கத்தைக் இப்போது நம் பார்வையில், காண்கிறோம், எல்லா சிறு குழுக்களையும் ""ஒரு மகத்தான ஐக்கியத்திற்குள்"" கொண்டு வருவதற்காகவே, அவர்கள் அதை அழைக்கிறார்கள். அவர்களில் சிலர் இதை விசுவாசிக்கிறார்கள், சிலர் அதை விசுவாசிக்கிறார்கள்; சிலர் இதை மறுக்கின்றனர், சிலர் அதை மறுக்கின்றனர். வேதம், ""இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?"" என்று கூறியுள்ளது. அது ஒருபோதும் கிரியை செய்யாது. " 61 நாம் ஒரு உடன்படிக்கையில் இருக்க வேண்டும். எதனோடு என்ன உடன்பாடு? நாம் ஒருவருக்கொருவர் உடன்படவில்லையென்றாலும், நாம் வார்த்தையோடும், தேவனோடும் உடன்படிக்கையில் இருக்க வேண்டும். அதனோடு தான் அது உடன்படிக்கையில் இருக்க வேண்டும். 62 இப்பொழுது நாம் கண்டறிகிறோம், ஒரு பலவந்த ஐக்கியம் பாபிலோனிலுள்ள ஜனக் குழுக்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. அதைப் போன்ற ஒரு காரியத்தில் தேவன் தம்முடைய நாமத்தைத் தரிப்பிக்க முடியாது. அவர் ஒருபோதும் செய்யவில்லை, அவர் ஒருபோதும் செய்யமாட்டார். அவர்கள் அதைச் செய்ய முயற்சித்த போதிலும், அவர்கள் தங்களுடைய பெயரை அதற்குள் தரிப்பித்துக் கொண்டனர், அவருடைய நாமத்தை அதில் தரிப்பித்தார்கள், ஆனால் அது அவ்வண்ணமாய் இல்லை. 63 ஆனால் அவர் தம்முடைய நாமத்தை எங்கே தரிப்பிக்கிறார் என்பதை நாம் கண்டறிய வேண்டும், ஏனென்றால் கிறிஸ்தவர்கள் வருவதற்கும், விசுவாசிக்கிற பிள்ளைகளுக்கும் அவர் அளித்துள்ள ஒரே ஸ்தானமாக, இந்த ஸ்தானம் உள்ளது, இந்த ஸ்தானத்தில் அவரை ஆராதிக்க வேண்டும். இந்த ஸ்தானம் என்னவாயிருக்கும்? 64 இப்பொழுது இதை ஆதரிக்க வேண்டுமானால், நான் கூறப்போகும் காரியத்தை நாம் முழு வேதாகமத்திலிருந்தும் ஆதரிக்கலாம். ஏனென்றால், அவர் தெரிந்து கொண்ட அந்த ஸ்தானம் கிறிஸ்துவில், இயேசு கிறிஸ்துவில் உள்ளது. அது அவருக்குள் உள்ளது, அவருடைய குமாரன்; தேவனுடைய குமாரன், இயேசு கிறிஸ்து. 65 “சரி,” நீர், “அவர் அந்த ஸ்தானத்தைத் தேர்ந்தெடுப்பார் என்று வேதத்தில் இங்கே வாசிக்கிறோம் என்று நான் நினைக்கிறேன், அந்த இடத்தில் அவருடைய 'நாமத்தையும்' அவர் தரிப்பிப்பார்” என்று கூறினீர். 66 பாருங்கள், மகன் எப்பொழுதுமே தகப்பனின் பெயரையே சூடிக் கொள்கிறான். என்னுடைய பெயர் பிரான்ஹாம், ஏனென்றால் என்னுடைய தகப்பனார் பெயர் பிரான்ஹாம் என்பதாகும். "67 இயேசு தம்முடைய பிதாவின் நாமத்தில் வந்ததாகக் கூறினார். பரிசுத்த யோவான் 5:43-ல், ""என் பிதாவின் நாமத்தில் வருகிறேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறுகிறது. ஆகையால் அங்கே தான் தேவன் தம்முடைய சொந்த குமாரனின் பலியின் கீழ் அவருடைய நாமத்தைத் தரிப்பித்தார்! அது தேவனால் அளிக்கப்பட்ட ஒரே ஸ்தானம். அங்கேதான் ஜனங்கள் தேவனை கிறிஸ்துவுக்குள் சந்திக்க முடியும். அதுவே அவருடைய அளிக்கப்பட்ட ஸ்தானமாய் உள்ளது. எந்த ஸ்தாபனமும் இல்லை, எந்தக் கோட்பாடும் இல்லை, வேறு ஒன்றுமே இல்லை, தேவன் சந்திப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். இயேசுவை மாத்திரமே அவர் சந்திப்பார், ஏனென்றால் அவருடைய நாமம் அந்த ஒரே ஸ்தானத்தில் மாத்திரமே உள்ளது. " "68 நான் வேதவசனங்களைப் பின்பற்றும்போது, யோவான், யோவான் 5-ம் அதிகாரம் மற்றும் 43-ம் வசனத்தைப் பின்பற்றும்போது, இயேசுவையும் கேட்கிறோம், அவர், ""அவருடைய நாமத்தில் வேறொருவர் வருவார், அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்” என்றார். நாம் ஒரு கோட்பாட்டில் சேரலாம், ""மற்றொரு ஸ்தாபனத்தில்” சேர்ந்து கொள்ளலாம், நாம் ஒரு ஸ்தாபனத்தில் சேர்ந்து கொள்ளலாம், அப்பொழுது நீங்கள் அவனை ஏற்றுக் கொள்வீர்கள்; ஆனால் நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளும்போது, அது வித்தியாசமாக இருக்கிறது. “நான் மெத்தோடிஸ்டு என்றும், நான் பாப்டிஸ்டு என்றும், நான் பிரஸ்பிடேரியன் என்றும் கூறுகிற வேறொருவன் வருவான், நீங்கள் அதையெல்லாம் சரியாய் ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் நான் என் பிதாவின் நாமத்தில் வந்து, நான் செய்வதாகப் பிதா கூறியவைகளையே செய்து வருகிறேன். நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார். அவர், ""யோவான் வந்தபோது, அவன் ஒரு மகத்தான சாட்சியை உடையவனாயிருந்தான். ஆனால் யோவான் என்ன செய்தான் என்பதைக் காட்டிலும் தேவனிடத்தில்—தேவனுக்குள் ஒரு மகத்தான சாட்சியை நான் உடையவனாயிருக்கிறேன். நான் செய்யும்படி பிதாவானவர் எனக்குக் கொடுத்திருக்கிறதை நான் செய்கிறேன்” என்றார். அவரைக் குறித்து எழுதப்பட்ட வார்த்தைகள், அவர் அந்நாளில் என்னவாயிருக்க வேண்டும் என்பதேயாகும். ஏனென்றால் அவர்... " 69 அவருடைய நாமம் தேவனாயிருந்தது. தேவனுக்கு அநேக பட்டப்பெயர்கள் உள்ளன. தேவன் தாமே ஒரு பட்டப்பெயர், யேகோவா-யீரே, யேகோவா-ரப்பா, யேகோவா-மனாசே என்று அழைக்கப்பட்டார். அவர் சாரோனின் ரோஜா என்றும், பள்ளத்தாக்கின் லீலி என்றும், விடிவெள்ளி நட்சத்திரம் என்றும் அழைக்கப்பட்டார்; அல்பா, ஓமெகா, ஆதியும் அந்தமும்; அதன்பின்னர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; இந்த எல்லாப் பட்டப்பெயர்களும். "70 ஆனால் அவருடைய நாமம், தேவனுடைய நாமம் அபிஷேகம் பண்ணப்பட்டவர் ""இயேசு கிறிஸ்து” என்பதாகும். அதுவே அவருடைய நாமம். அவர் அநேக பட்டங்களை உடையவராயிருந்தார், ஆனால் ஒரே நாமம், ""நீங்கள் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழே மனுஷர்களுக்குள்ளே வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை.” அது உண்மையென்று நாம் கண்டறிகிறோம். " "71 மேலும் இந்த எச்சரிப்புடன் கூட, அதாவது, ""இந்த மற்றவன் வரும்போது, அவன் தன்னுடைய சொந்த நாமத்தினால் வருகிறபோது, 'மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தேகோஸ்தே' போன்றவர்களை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். நீங்கள் அவனோடு சேர்ந்து கொள்வீர்கள்” என்றார். ஆனால் கிறிஸ்து புறக்கணிக்கப் படுகிறார். அவர்கள் அதைப் புறக்கணிக்கின்றனர். " "72 தீர்க்கதரிசி கூறினார்! நாம் சற்று அவருடைய நாமத்தைத் தொடர்ந்து பார்ப்போமாக. தீர்க்கதரிசி, “அவருடைய நாமம் 'இம்மானுவேல்' என்று அழைக்கப்படும்” என்று கூறினான். இப்பொழுது, ஏசாயா அதை ஏறக்குறைய 7-ம் அதிகாரத்தில் கூறினான். மத்தேயு 1:23-லும் கூட, “கர்த்தர் தீர்க்கதரிசி மூலமாய் உரைத்தது நிறைவேறும்படி, இவையாவும் சம்பவித்தது என்று கூறி, 'அவருடைய நாமம் இம்மானுவேல் என்று அழைக்கப்படும். அதற்கு, ""தேவன் நம்மோடிருக்கிறார்” என்று அர்த்தம்” என்றான். " "73 இம்மானுவேல், அவருடைய நாமம் இயேசு என்பதாகும், தேவன் தம்முடைய பிதாவின் நாமத்தோடு, நம்மோடு இருக்கிறார். அவர் தம்முடைய பிதாவின் நாமத்தில் வந்தார். அங்குதான் தேவன் அவருடைய நாமத்தைத் தம்முடைய குமாரனில் தரிப்பித்தார். அந்த ஸ்தானத்தில் மாத்திரமே நீங்கள் அவரை ஆராதிக்க முடியும். தேவன் உங்களை எப்பொழுதும் சந்திப்பார் என்பது, பலி செலுத்தப்படும் ஆட்டுக்குட்டியின் மூலம் மாதிரியாக்கப்பட்ட அந்தக் குமாரனில் மாத்திரமேயாகும். பழைய ஏற்பாடு முழுவதும், யாவரும் அந்த ஒரு காரியத்தின் மாதிரிகளைக் கொண்டு வந்தனர், அந்த ஸ்தானம் மாத்திரமே, தேவன் மாத்திரமே பலியின் இரத்தத்தின் கீழ் சந்தித்தார்; ஒரே ஸ்தானத்தில் அவர் சந்தித்தார். இன்றைக்கு அவர் சந்திக்கிற ஒரே ஸ்தானம்: கோட்பாட்டின் பெயரிலோ அல்லது ஒரு ஸ்தாபனத்தின் பெயரிலோ, ஒரு சபையின் நாமத்தில், அல்லது ஒரு குழுவின் பெயரிலோ, அல்லது ஒரு சங்கத்தின் நாமத்திலோ அல்ல. ஆனால் ""இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்!"" " 74 நான் ஒரு வாலிபனாயிருந்தபோது, நான் அதைச் சோதித்தேன். நான் மரித்தோரின் ஆவிகளோடு தொடர்பு கொள்ளுதலைக் குறித்தும், பிசாசைக் குறித்தும், அவன் எப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறான் என்பதைக் குறித்தும் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். தேவன் ஒருவர் உண்டாயிருந்தால், ஒரு பிசாசு இருக்க வேண்டும் என்பதை நான் அறிந்திருந்தேன், ஏனென்றால் வேதம் ஒரு பிசாசு இருப்பதாகக் கூறியுள்ளது. அவர், நான் நினைத்தேன்...இந்த மரித்தோரின் ஆவிகளோடு தொடர்பு கொள்ளுபவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நான் அவர்களில் சிலரிடம் சென்றேன், அவர்கள் போலியானவர்கள் என்றும், அதற்கு ஒன்றுமேயில்லை என்றும், ஒரு பெரிய பாவனை விசுவாசம் என்றும் கண்டறிந்தேன். ஆனால் அவர்களில் சிலர் உண்மையான மரித்தோரின் ஆவிகளோடு தொடர்பு கொள்ளுபவர்களாயிருந்தனர் என்பதை நான் கண்டறிந்தேன். "75 நான் ஒரு சமயம் ஒரு முகாமில் இருந்தேன், அங்கே நானும் ஒரு ஊழியக்காரனும் அவர்களைப் பார்க்கச் சென்றோம். அவர்கள் மேஜையை தரையிலிருந்து மேலே உயர்த்தியிருந்தனர், அதன் மேல் விஸ்கி மதுபான கண்ணாடிக் கோப்பைகள் இருந்தன; அந்த மேசையை எடுத்து, அதை முன்னும் பின்னுமாகத் திருப்பினார். கட்டிடத்தினூடாக வீணை பறந்தது. ஜனங்களுடைய உடைகளுமே. இதை அறையில் வைத்திருந்தேன். இந்த மரித்தோரின் ஆவியுலக தொடர்பாளர், “அதைக் கீழே வீழ்த்த நான் எவருக்கும் சவால்விடுகிறேன்"" என்று கூறினாள். " 76 இரண்டு பேர், “நான் அதை இறக்கிவிடுவேன்” என்றனர். அவர்கள் அந்தவிதமாக அதன் கால்களைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு, அதைப் பற்றிக்கொள்ள முயன்றனர். அது முடியவில்லை. ஏன், அந்த மேசையானது அவர்களைத் தரை தூக்கி எறிந்தது. 77 நீங்கள் சும்மா உட்கார வேண்டாம். நீங்கள் ஒருபோதும் ஒரு மிஷனரியாக இருந்து, ஊழியக் களத்தில் இருந்திருக்க வில்லையென்றால், நீங்கள் அறிந்துள்ள ஒரே காரியம் ஒரு பிசாசின் சிந்தனையாகும். தெருக்களில் நடந்து செல்லும் இந்த ஜனங்களில் சிலரை நீங்கள் இங்கே நோக்கிப் பார்த்தால், நீங்கள் அவனைக் காண முடியும். ஆனால் ஒரு பிசாசு உண்டு! நிச்சயமாகவே உள்ளது. "78 ஜனங்கள் பிசாசை ஆராதிக்கிறார்கள், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூட அறியாதிருக்கிறார்கள். அவர்கள் சபைகளில் பிசாசை ஆராதிக்கிறார்கள், ""மனுஷனுடைய கற்பனைகளையும், பிரமாணங்களையும் பாரம்பரியங்களையும் உபதேசங்களாகப் போதித்தல்."" நான் கூறினேன்... " "79 இந்தப் பெண்மணி என்னிடம் சத்தமிட்டு, ""நீர் ஒரு பிரசங்கி என்று அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள்"" என்றாள். " "நானோ, ""நான் தான்"" என்றேன். " "80 அவள், “அப்படியானால் நீர் இல்லையென்றால்..."" என்றாள். ""இதைக் குறித்து நீர் என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டாள். " "அதற்கு நான், ""அது பிசாசு” என்றேன். " மேலும் அவள், “சரி, அப்படியானால், உனக்கு அதிக வல்லமை இருந்தால், அதைக் கீழே தட்டிவிடும்” என்றாள். 82 நான், “எனக்கு எந்த வல்லமையும் கிடையாது. எனக்கு எந்த வல்லமையும் இல்லை, ஆனால் நான் இங்கே ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கிறேன்” என்றேன். "83 நான், ""கர்த்தராகிய இயேசுவே, நீர் பரிசுத்த மாற்கு 16-ம் அதிகாரத்தில், 'என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்' என்று கூறினீர்” என்றேன். நான், ""இப்பொழுது யுத்தம் எனக்கு முன்பாக வைக்கப் பட்டிருக்கிறதை உம்முடைய ஊழியக்காரன் அறிந்து கொள்ளட்டும்!"" என்றேன். " "84 நான், “அந்த மேசையை, 'பரிசுத்த சபையின்' நாமத்தினால், கீழே விழக் கட்டளையிடுகிறேன்” என்று கூறினேன். அது அங்கேயே தரித்திருந்தது. நான், ““பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்,' நாமத்தில் அந்த மேசையை அங்கே விழும்படி கட்டளையிடுகிறேன்” என்றேன். அது அங்கேயே தரித்திருந்தது. நான், ""நான் அந்த மேசையை 'இயேசு கிறிஸ்துவின்,' நாமத்தினால் கீழே விழக் கட்டளையிடுகிறேன்” என்றேன். அது தரையில் மோதி, நான்கு கால்களும் உடைந்து போகுமளவிற்கு விழுந்தது! " "85 ""என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்!” அதுவே பிதாவின் நாமம். அவர் அவருடைய நாமத்தை இயேசு கிறிஸ்துவுக்குள் தரிப்பித்தார். அவர் அவருக்குள் ஆராதிக்கும்படி, சந்திக்கிறார். பிசாசுகளைத் துரத்தும்படிக்கு, அவருக்குள் அவர் சந்திக்கிறார். அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்தும்படிக்கு, அவருக்குள் சந்திக்கிறார். அவர் இரட்சிக்கும்படிக்கு அவருக்குள் சந்திக்கிறார். அவருக்குள் அவர் இரட்சிக்கும்படி, பரிசுத்த ஆவியினால் நிரப்பிச் சந்திக்கிறார். ஜனங்களை ஆராதனைக்காகச் சந்திப்பதற்கான தேவனுடைய ஒரே ஸ்தானம் அதுவேயாகும். இப்பொழுது இயேசு அதையும் கூடக் கூறினார் என்று நாம் கண்டறிகிறோம்...இயேசு என்ற நாமம் என்ற வார்த்தை ""யேகோவா- இரட்சகர்” என்று பொருள்படுகிறது, இரட்சகராகிய யேகோவா. " "86 நினைவிருக்கட்டும், “நீங்கள் கர்த்தரை ஆராதிக்க வேண்டாம்..."" 5-ம் வசனம் 5, ""தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் எந்த வாசல்களிலும் கர்த்தரைத் ஆராதிக்க வேண்டாம். அங்கே எந்த வாசலிலும், நீங்கள் அவரை ஆராதிக்க வேண்டாம்” என்று தேவன் இங்கே உபாகமம், 16-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில் கூறினார். ""தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் எந்த வாசல்களிலும் அவரைத் ஆராதிக்க வேண்டாம். அவர் உங்களுக்கு இவைகளை சோதனைகளுக்காக அருளினார்” என்றார். கர்த்தருக்குச் சித்தமானால், இந்த வாரம் நாம் அதற்குள்ளாகச் செல்லப் போகிறோம், தேவன் தம்முடைய வார்த்தையைத் திரும்ப எடுத்துக்கொள்கிறாரா அல்லது இல்லையா என்று பார்க்கப் போகிறோம். கவனியுங்கள், அவர் உங்களுக்கு வாசல்களை அருளியிருக்கிறார், ஆனால் அந்த வாசல்களில் எதிலும் கர்த்தரை ஆராதிக்காதீர்கள், ஏனென்றால் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கே சந்திக்கப் போவதில்லை. " "87 ஆனால் தேவனாகிய கர்த்தர் வாசலைத் தெரிந்துகொண்டார். அவர் வாசலைத் தெரிந்துகொண்டார். இயேசு பரிசுத்த யோவான் 10-ம் அதிகாரத்தில், ""நானே ஆட்டுத் தொழுவத்திற்கு வாசல். நானே அந்த வாசல்” என்றார். அவர் யேகோவா-இரட்சகர். " 88 இப்பொழுது நாம் இங்கே மணிக்கணக்கில், அதை விளக்கிக் கூறலாம். ஆனால் சத்தியத்திற்கும் வார்த்தைக்கும் நீங்கள்—நீங்கள் பதிலளிக்கிறீர்கள் என்பதை உங்களுடைய செயலின் மூலம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். எனவே நாங்கள் இதற்கு மேல் செல்லமாட்டோம், நீங்கள் விரும்புகிற எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். நீங்கள் வரும் இடமெல்லாம், அது சத்தியமாயிருந்தால், அது சரியாக வார்த்தையின் மற்றவற்றோடு இணங்கி நிற்கும். வேதம் ஒரு இடத்தில் ஒரு காரியத்தைக் கூறவும், வேறொரு காரியத்தை மற்றொரு இடத்தில் கூறவும் நீங்கள் செய்ய முடியாது, அது அவர் முதலில் கூறினதற்கு முரணாக உள்ளது. அது எல்லா நேரத்திலும் ஒரே விதமாக இருக்க வேண்டும். 89 காலதாமதமாகிக் கொண்டிருப்பதை நான் காண்கிற காரணத்தால், நான் இதைக் குறித்த ஏராளமான வேதவாக்கியங்களை இங்கே விட்டுவிடுகிறேன். நம்முடைய சகோதரியும் மற்றவர்களும் இன்றிரவு இங்கே ஆராதனையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் மேலும் நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க விரும்புகிறோம். அதாவது, பில்லி, அவர்களிடம் சில ஜெப அட்டைகள் உள்ளனவா என்பதைக், கண்டறிந்து கொள். "90 [யாரோ ஒருவர், ""இன்றிரவு ஆராதனை இல்லை” என்கிறார்) ஆராதனை இல்லை. நல்லது. நல்லது, நல்லது. சரி. இப்பொழுது நாம் அதைக் கண்டறியலாம். சரி. சரி. (சபையார் கைதட்டுகிறார்கள்.) கர்த்தர் இதற்காக இந்தப் பெண்மணியை ஆசீர்வதிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம், இந்த இடத்தை நாம் பெற்றுக்கொள்ள அனுமதித்து, நேரத்தை நமக்கு அளித்தார். " 91 இயேசுவானவர் அந்த ஸ்தானமாயிருக்கிறார் என்பதற்கு பிழையற்ற அநேக நிரூபணங்கள் உள்ளன. அவரே வாசலாயிருக்கிறார், அவரே அந்த நாமமாயிருக்கிறார், மனிதனை ஆராதிப்பதற்காகச் சந்திக்கும்படி தேவன் அளித்துள்ள ஒரே வழியாயிருக்கிறார். அவரே வழி, சத்தியம், ஜீவன்; வாசல், வாசல்; அல்பா, ஓமெகா, ஆதியும் அந்தமும்; சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, விடிவெள்ளி நட்சத்திரம்; அல்பா, ஓமெகா. அவர் எல்லாமுமாயிருக்கிறார், முழு காரியமும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அவர் தாவீதின் வேரும் சந்ததியுமாய், பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமாயிருக்கிறார். அவருக்குள் தேவத்துவத்தின் பரிபூரணம் வாசம் செய்கிறது, சரீரப்பிரகாரமாக, நாம் தேவனுடைய தேவத்துவத்தில் தேவனுக்கு குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம். ஆம். குமாரரும், குமாரத்திகளுமாக, நீங்கள் அங்கிருந்தால், நாம் அந்தக் குடும்பத்தில் இருக்கிறோம். 92 இப்பொழுது நாம் எப்படி இந்த மகத்தான ஸ்தானத்திற்குள் ஆராதிக்கப் போகிறோம்? அதுதான் அடுத்த கேள்வி. இயேசு அந்த ஸ்தானமாயிருந்தால், நாம் எப்படி இந்த ஸ்தானத்திற்குள் பிரவேசிக்க முடியும்? அவர் தேவனுடைய நாமம். அவர் தேவனுடைய ஆராதனை ஸ்தானமாயிருக்கிறார். அவர் மாத்திரமே ஆட்டுத்தொழுவத்திற்கு வாசல். அப்பொழுது நாம் எப்படி அவருக்குள் பிரவேசிக்கிறோம் என்பதை நாம் கண்டறிய விரும்புகிறோம். 93 இப்பொழுது, நீங்கள் வாசலுக்குள்ளாக இருந்தால், உண்மையாகவே, நீங்கள் குடும்பத்தைப் போல உள்ளே வருவீர்கள், நாம் அன்றொரு நாள் பேசிக்கொண்டிருந்தது போல, ...இல்லை காலை உணவின் போது, சிறிய ஆட்டைக் குறித்து, தேவன் அந்தக் கடைசி சிறு ஆட்டைக் கண்டுபிடித்து அதை உள்ளே கொண்டு வரும் வரையில் கதவை மூடமாட்டார். நீங்கள் உள்ளே வந்திருந்தால், அப்பொழுது நீங்கள் ஒரு குடும்பமாகி விடுகிறீர்கள். நீங்கள் தேவனுக்குள் வரும்போது, நீங்கள் ஒரு தேவனுடைய குடும்பமாயிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு தேவனுடைய குடும்பமாக இருந்து, பிரஸ்பிடேரியனாக, மெத்தோடிஸ்டாக, பாப்டிஸ்டாக, பெந்தேகோஸ்தேயாக இருக்க முடியாது. உங்களால் அதைச் செய்ய முடியாது. நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் வர வேண்டும். """பாருங்கள்,” நீங்கள், ""நாங்கள் அதைச் செய்தோம்” என்று கூறலாம். நீங்கள் அதைச் செய்தீர்களா என்று நாம் பார்ப்போம். " "95 இப்பொழுது வேதம் என்ன கூறுகிறது என்பதை நாம் கண்டறிவோமாக. முதலாம் கொரிந்தியர் 12-ம் அதிகாரத்தில் வேதம், ""ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்” என்று கூறியுள்ளதை நாம் காண்கிறோம். நாம் ஒரே பரிசுத்த ஆவியினால், கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். நாம் உள்ளே அசைக்கப்படவில்லை, நாம் அதில் இணைக்கப்படவில்லை, நாம் தண்ணீரினால் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. நாம் இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாகப் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிகப்பட்டிருக்கிறோம். " "96 நீங்கள் அங்குச் செல்லும்போது அது எவ்வளவு காலம் நீடித்திருக்கும்? நீங்கள் உங்களைத் தவறாக நடத்தும் வரையிலா? எபேசியர் 4:30, “நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்"" என்று கூறுகிறது. என்னோடு அல்ல, அவரோடு தர்க்கம் செய்யுங்கள். அதைத்தான் அது கூறுகிறது. நான் அதை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சரி. “நீங்கள் மீட்கப்படும் நாள்வரைக்கும் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள்."" இயேசு உங்களுக்காக வரும் நாள் வரைக்கும். " "97 அப்படியானால், அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், அப்பொழுது நீங்கள் நீங்களே அல்ல, நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள், அல்லது அங்கே கிரேக்க மொழியில் ""ஒரு புதிய சிருஷ்டி” என்று பொருள்படுகிறது. நீங்கள் மீண்டும் மீண்டும் சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறீர்கள். தேவனுடைய வல்லமை உங்கள்மேல் வருகிறது, நீங்கள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரு புதிய சிருஷ்டி; அது முழு சரீரத்தையும், ஆவிக்குரிய சரீரத்தையும், மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படுத்துகிறது. வேறு வழியே இல்லை! " "98 நீங்கள் ஒரு கிறிஸ்தவன் என்று கூறிக்கொண்டு, அவருடைய வார்த்தைக்கு ஒரு காரியத்தில் கீழ்ப்படியாமல் இருப்பது எப்படி? நியாயப்பிரமாணத்தின் ஒரு பாகத்தில்—ஒரு பாகத்தில் அதற்குக் கீழ்ப்படியாமல் போனவன் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருந்தான். யாராயிருந்தாலும்! இயேசு, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்"" என்றார். வார்த்தைகளின் ஒரு பாகம் மாத்திரமல்ல; ஒவ்வொரு வார்த்தையும்! வெளிப்படுத்தின விசேஷம் 22-ம் அதிகாரத்தில் அவர், ""இந்தப் புஸ்தகத்திலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால் அல்லது இதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய—அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும்” என்று கூறினார். நாம் வேதாகமத்திலிருந்து எடுத்துப் போடவோ அல்லது அதனோடு சேர்க்கவோ கூடாது. அது என்ன கூறுகிறதோ அதை அப்படியே கூறுங்கள். " "99 முதலாம் கொரிந்தியர் 12-ல், அது, ""நாம் யாவரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்"" என்று கூறியுள்ளது. " "100 இப்பொழுது நீங்கள் இந்தச் சரீரத்திற்குள்ளான பிறகு, ரோமர் 8:1, ""ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை."" என்றார். அங்கே ஆக்கினைத்தீர்ப்பு இல்லாத ஸ்தானம் உள்ளது. நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் சபைகளுக்குச் சென்றாலும், அது எங்கிருந்தாலும் சரி; நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால், நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள், உங்களுக்குள்ளாக ஆக்கினைத்தீர்ப்பு இல்லை, எங்குமே இல்லை. அதுவே தேவனுடைய சந்திப்பு ஸ்தானமாயுள்ளது. அங்குதான் தேவன் ஆராதிக்கிறவனை சந்திக்கிறார். அங்கேதான் நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாக எண்ணப்படுகிறீர்கள், ஏனென்றால் அவர்கள் உலகத்தின் காரியங்களுக்கு மரித்திருக்கிறார்கள். அவர்கள் அவருக்குள் உயிருள்ளவர்கள். ஜீவனுள்ள தேவனுடைய பிரசன்னம் அவர்களோடு நாளுக்கு நாள் உள்ளது. " 101 அவர் ஒவ்வொரு காலத்தினூடாகவும், அவர்களுக்குள் ஜீவிக்கிறார். வேதாகமத்தினூடாகத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு காலத்திலும், மனிதன் தேவனுடைய தேவைகளைச் சந்திக்கும்போது, அந்த நாளுக்கான தம்முடைய எழுதப்பட்ட வார்த்தையில் அவர் அளித்துள்ள ஸ்தானத்திற்குள் வரும்போது, தேவன் அந்த நபரை ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கும்படிச் செய்கிறார், அவனுக்கு ஆக்கினைத்தீர்ப்பு கிடையாது. யோபுவைப் பாருங்கள். 102 நான் இந்த ஒலிபெருக்கிகளில் இருக்கிறவிதமாகவே, நான் உங்களைச் செவிடாக்கிக் கொண்டிருக்கிறேனா? நான் அதைக் குறித்து வருந்துகிறேன். அது இங்கே எதிரொலி என்பதை நான் அறிவேன். நானே அதை, இங்கே கேட்கிறேன். 103 ஆனால், பாருங்கள். யோபுவை, எத்தனை பேர் கண்டனம் செய்ய முயன்றாலும், எத்தனைபேர் அவன் தவறாயிருந்தான் என்று கூறினர், அவன் அந்தச் சர்வாங்க தகனபலியின் மூலம் தேவனுடைய கட்டளையைக் கைக்கொண்டான். அவன் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொண்டபடியினால், அவன் நீதிமானாக்கப்பட்டான் என்பதை அவன் அறிந்திருந்தான். அந்தவிதமாகத்தான் அவன் நீதிமானாக்கப் பட்டான், ஏனென்றால் அவன் செய்யத் தேவன் விரும்பிய காரியங்களை அவன் செய்துகொண்டிருந்தான். 104 ஜீவனுள்ள தேவனுடைய பிரசன்னம், ஒவ்வொரு நாளும் கோட்பாடுகளின் மரணத்திலிருந்து, ஜீவனுக்கும், இந்நாளின் வார்த்தைக்கும் பிரகாசிக்கிறது. இப்பொழுது, தேவன் செய்கிற காரியங்களை அவர் உடையவராயிருக்கிறார். 105 அன்றொரு நாள் காலைச் சிற்றுண்டி வேளையில் நான் கூறினது போன்றே, ஒருஒரு சிறு மலராக. ஒரு விதை வெளிச்சத்திற்கு வரும்போது, அது வளரத் துவங்குகிறது. அது தேவனுடைய ஊற்றிலிருந்து பருகி, அது மொட்டுப் பகுதியை அடையும் வரை தொடர்ந்து மேலே தள்ளிக் கொண்டேயிருக்கிறது, மலருக்குள்ளாக எழுகிறது, மலராக மலர்கிறது. 106 இப்பொழுது நாம் கிறிஸ்துவோடு துவங்கும்போது, நாம் அதேவிதமாகவே வளருகிறோம் என்பதை நாம் கண்டறிந்துள்ளோம், ஏனென்றால் நாம் கிருபையிலும், தேவனுடைய போதனையிலும் வளருகிறோம். "107 எந்தக் காலத்துக்கும், தேவனால் அளிக்கப்பட்டிருக்கிற ஒரே திட்டம், அவருடைய வார்த்தையே. அவருடைய குமாரன் வந்து, அவருடைய காலத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் வெளிப்படுத்தினார். எல்லா தீர்க்கதரிசிகளும் சரியாகச் சரியான நேரத்தில் வந்தனர், அவர்கள் பூமியில் ஜீவிக்கிற தேவனுடைய வார்த்தையாயிருந்தனர். அவர்கள் வார்த்தையா யிருந்தனர். அவர்கள் ""தேவர்கள்” என்று இயேசு கூறினார். இயேசு அந்தத் தீர்க்கதரிசிகளை ""தேவர்கள்” என்று அழைத்தார். " "108 நான் கடந்த முறை நடத்திய கூட்டத்தில் ஒரு மனிதன் என்னைச் சந்தித்தார், அவர், ""நீர் ஒரு பரிதாபமான வேத பண்டிதர்” என்றார். 109 மேலும் நான், “நான் ஒருவராக உரிமை கோரவில்லை” என்றேன். நான், ""வார்த்தையானது ஒரு வேத சாஸ்திரியிடம் வருவதில்லை; வேத சாஸ்திரம் அதைச் செய்கிறது.” வார்த்தை வருகிறது...புரிகிறதா? நான், ""வெறும் வேத சாஸ்திரம் ஒரு வேத சாஸ்திரிக்கு வருகிறது. ஆனால்,"" நான், ""நாம் வேறொன்றைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றேன். " 110 இப்பொழுது ஒவ்வொரு காலத்திலும் தேவன் ஒரு குறிப்பிட்ட காரியம் சம்பவிக்கும் என்று கூறினபோது, இங்கே அந்த மனிதன் தோன்றி, அதை வெளிப்படுத்தினார், இங்கே அந்த ஜனங்கள் தோன்றி, அவ்வாறு வாழ்ந்தனர் என்று நாம் கண்டறிகிறோம். அது தேவன்தாமே ஜனங்களுக்குள் ஜீவித்ததாயிருந்தது, ஏனென்றால் அது அவருடைய வார்த்தைக்குப் பதிலளிப்பதாயிருந்தது. 111 இப்பொழுது, தேவனால் அளிக்கப்பட்ட ஒரே வழியும், அளிக்கப்பட்ட ஒரே திட்டமும் இன்றைக்கு, அவருடைய குமாரன், இந்தக் காலத்திற்கான அவருடைய வார்த்தையினூடாக, அவருடைய ஜீவனின் ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்டு, உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறார். 112 இப்பொழுது நமக்குப் பெரிய வேத சாஸ்திர பள்ளிகள் உள்ளன. அநேக சமயங்களில் நாம் அதைச் செய்யும்போது...அதற்கு எதிராக ஒன்றுமேயில்லை, நிச்சயமாகவே ஒன்றுமேயில்லை. ஆனால், நீங்கள் பாருங்கள், நீங்கள் ஒரு வேத சாஸ்திரப் பள்ளியைப் பெற்றிருக்கும்போது.... "113 இயேசு, பரிசுத்த யோவான் 4-ல், ""தேவன் ஒரு ஆவியாயிருக்கிறபடியால், ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுதுகொள்ளப்படும் நேரம் வந்து கொண்டிருக்கிறது, இப்பொழுதே வந்துள்ளது” என்று கூறினார். இப்பொழுது சில ஜனங்கள் ஆவியைப் பெற்றுள்ளனர், சத்தியமே இல்லை. மற்றவர்கள் சத்தியத்தை உடையவர்களாயிருக்கிறார்கள், ஆவியே கிடையாது. " "114 எனவே இது நமக்கு ஒரு பெரிய கார் இருந்தால், நாம் எங்காவது காடிலாக் காரில் செல்வது போன்றே உள்ளது. இரண்டு காடிலாக் கார்களும் ஒரே மாதிரியாகவே செய்யப்பட்டிருந்தன, நாங்கள் அவைகளை இங்கே வெளியே தள்ளி மற்றும் நாம்...பெட்ரோல் சேமிப்புக் கலங்கள் வரை, நாங்கள் அவை இரண்டிலும் பெட்ரோல் நிரப்பினோம். நீங்கள் இயக்கி, அந்த ஒன்றை இயக்குங்கள். பாருங்கள், நீங்கள் நோக்கிப் பார்த்து, “இருக்கை சரியாக உள்ளது. திசைமாற்றி சக்கரம் அழகாக இருக்கிறது, அதில் வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் மெத்தென்ற பூம்பட்டுவகை, அது அழகாக அமைகிறது. ஓ, நீ பின்னால் உட்கார்ந்து கொண்டு உறங்கு"" என்கிறீர்கள். மேலும், ஓ, உங்களால் ஏராளமான காரியங்களைச் செய்ய முடியும், ஒவ்வொன்றும், ஆனால், நீங்கள் பாருங்கள், அவைகளில் ஒன்றை..அவைகள் எல்லாமே சரியான இயங்கு முறையை உடையவைகளாயிருக்கின்றன, ஆனால் அவைகளில் ஒன்றில் இயங்கும் சக்தி உள்ளது. நீங்கள் பாருங்கள், நீங்கள் அந்த இயக்க முறைமையை அறிந்திருக்கலாம், ஆனால் அவைகளை இயக்க, இயங்கு முறையைத் துவக்க இயங்கு சக்தி தேவைப்படுகிறது. " 115 இன்றைக்கு சபையோடுள்ள காரியமும் அதுதான். நாம் வேத சாஸ்திரத்தினால் நிறைந்து, அதில் எந்தவித இயங்கு சக்தியும் இல்லாமல் இருக்கிறோம். அது உண்மை. பார்த்தீர்களா? 116 வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் பெட்ரோலுக்கு தீப்பொறியைப் பெற்றிருக்க வேண்டும், இல்லையென்றால் பெட்ரோல் அதற்கு மேல் இல்லை...அதை எரிப்பதற்கு அதற்குத் தீப்பொறி இல்லாத வரையில், அது தண்ணீரைப் போலக் கூட உபயோகமற்றது. எனவே, அதுதான் வழி. 117 நாம் எவ்வளவு நன்றாகக் கற்பிக்கப்பட்டிருந்தாலும், நாம் எவ்வளவு நன்றாக விசுவாசித்தாலும், நாம் கூறுகிற வேதத்தில் எவ்வளவுதான் உண்மையுள்ளது என்பது ஒரு பொருட்டல்ல, அவை யாவும் உண்மையென்று நாம் விசுவாசிக்கிறோம், அது அந்த—அந்த இயங்கு சக்தி இருக்க வேண்டும், தீப்பொறி, அந்த வார்த்தையை அனல் மூட்ட, அது உருளத் துவங்கும்படிச் செய்தான். அது அதைப் பெற்றாக வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யவில்லையென்றால், சபையானது அமைதியாக அமர்ந்திருக்கும், வாகனமும் செயல்படாமல் இருக்கும், நீங்கள் அமைதியாக அமர்ந்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் எவ்வளவுதான், “நான் அனுதாபப்படுகிறேன். அதனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல. அதைத் தூண்டிவிட, அந்த நூறு ஆக்டேனை தீப்பொறியிடச் செய்ய உங்களிடம் ஏதாவது இருக்க வேண்டும், பெரிய தேவனுடைய சபையானது முன்னேறிச் செல்லும். அது இயங்கும் சக்தியை இயக்கவியலுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இயங்கு முறையில் தவறொன்றுமில்லை, ஆனால் இயங்கும் திறனில் குறைவுள்ளது. 118 இன்றைக்கு சபையோடுள்ள காரியமும் அதுதான் என்று நான் நினைக்கிறேன், இந்த வார்த்தையை அழுத்தி, இந்த நாளுக்கென்று ஜீவிக்கச் செய்ய, நாம் அந்த இயங்கும் வல்லமையில் குறைவுள்ளவர்களாயிருக்கிறோம். 119 மார்டின் லூத்தர் தன்னுடைய நாளின் இயங்கு முறையையும், இயங்கு சக்தியையும் உடையவராயிருந்தார். ஜான் வெஸ்லி தன்னுடைய நாளில் அவைகளை உடையவராயிருந்தார். பெந்தேகோஸ்தேயினர் தங்களுடைய நாளில் அவைகளை உடையவர்களாயிருந்தனர். 120 நம்முடைய நாளைக் குறித்து என்ன? இது மற்றொரு காலம்! சபையானது இப்பொழுது முழுமையாக வளர்ந்திருக்க வேண்டும், கிறிஸ்துவை சந்திக்க ஆயத்தமாக, வேதாகமத்தில் அவர் வாக்குத்தத்தம் செய்த ஒவ்வொரு ஆசீர்வாதத்தின் வெளிப்படுத்துதலோடும், அந்த ஒரு மகத்தான சரீரத்தில் கிரியை செய்து, அங்கே அவர் ஜனங்களை சந்தித்து, ஆராதிக்கப்படுவார் என்ற, இந்த மகத்தான அவருடைய சபையிலே. 121 ஆனால், நீங்கள் பாருங்கள், நாம் நம்முடைய பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம், நாம் வாசிப்பதையும், எழுதுவதையும், கணிதத்தையும், தீர்க்கதரிசிகளின் சரித்திரம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறோம். அதெல்லாம் சரிதான், ஆனால் நீங்கள் அதற்குப் பின்னால் ஏதோ ஒன்றை வைத்திருந்தாலொழிய! "122 “ஓ,” நீங்களோ, “பாருங்கள், நான்-நான் சத்தமிட்டேன். நான் அந்நிய பாஷைகளில் பேசினேன்” என்கிறீர்கள். அது நல்லதுதான். நானும் கூட, அதை விசுவாசிக்கிறேன். ஆனால் நான் இன்னும் அதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கவில்லை. பாருங்கள், நீங்கள்— நீங்கள்...அது உதறும். நீங்கள் கூறுவதோ, ""பிளாங்க்-பிளாங்க், பூம்ப் பூம்ப்"" என்று பழைய கார் இயக்கத் துவக்க முயற்சிப்பது போலவே. நீங்கள், “ஆம், நான் இதை விசுவாசிக்கிறேன். நானும் கூட அதை விசுவாசிக்கிறேன். ஆனால், ஆனால் அது இதற்கு வரும்போது, அந்த நாட்கள், ஓ, இல்லை. இல்லை!” " 123 சகோதரனே, அவள் நூறு ஆக்டேன் கொண்டவளாக இருக்கிறாள், அவளுக்குப் பின்னால் ஒரு மின் ஆக்கி உள்ளது, அது தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் அதனுடைய வாக்குத்தத்தத்தின்படி சுட்டெரிக்கும். அது உண்மை. 124 அதுதான் இன்றைக்கு நம்மோடுள்ள காரியமாய் உள்ளது, நாம் ஏறக்குறைய ஒரு நிறுத்தத்திற்கு வந்துவிட்டோம். நாம் இதை விசுவாசிக்க விரும்புகிறோம், அதை விசுவாசிக்கிறோம். "125 இதைக் குறித்து நான் ஒன்றைக் கூறுகிறேன். ""பாருங்கள், எனக்குத் தெரியாது.""சரி, வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளதே! அதுவே அதைத் தீர்த்து வைக்கிறது. தேவன் அவ்வண்ணமாய் கூறியிருந்தால், அது செய்யப்பட வேண்டியதாயுள்ளது. நாம்... அதைத்தான் செய்யும்படி தேவன் கூறியிருந்தால், நாம் அதைச் செய்யத்தான் வேண்டும். தேவன் அதைத் தீப்பற்றிக் செய்யும் வரை அங்கேயே இருங்கள், அப்பொழுது நீங்கள் நேரடியாக மீண்டும் ஓடத் துவங்குவீர்கள், நீங்கள் பாருங்கள். நீங்கள் அவ்வாறு செய்யவில்லையென்றால், நீங்கள் எல்லா இணைப்புகளையும் கறைப்படுத்திவிடுவீர்கள். எனவே நமக்கு வித்தியாசமான ஏதோ ஒரு காரியம் தேவைப்படுகிறது, நம்மைச் எரியச் செய்ய நமக்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. " 126 அப்படியானால் கவனியுங்கள், அவர் பரிசுத்த ஆவியினாலே உள்ளே வருவது மாத்திரமல்ல, அவருடைய வார்த்தையைக் கற்றுக் கொள்வதன் மூலம், அவர் அந்த வார்த்தையை வெளிப்படுத்துகிறார். இப்பொழுது நினைவிருக்கட்டும், தீர்க்கதரிசிகள் வார்த்தையை விசுவாசித்தனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள். பரிசுத்த ஆவியாகிய தேவன் அவர்களுக்குள்ளாக வந்து, அந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி, அதை நிறைவேற்றினார். ஓ, என்னே! அதை யார் கண்டிக்கப் போகிறார்கள்? "127 இயேசு, “என்னில் பாவம் உண்டென்று யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? பாவம் என்பது 'அவிசுவாசம்.' தேவன் என்ன எழுதினாரோ, தீர்க்கதரிசிகள் என்ன கூறினீர்களோ, அவைகளுக்கு நானே பதில் அளிக்கிறேன். நான் செய்வேன் என்று அவர்கள் கூறினதையே நான் செய்கிறேன்"" என்றார். அவர் ஒரு தீர்க்கதரிசியாக, மனுஷகுமாரனாக வந்தார். சரியாக அவ்விதமாகத்தான் அவர் இருந்தார், அவர் அதை நிரூபித்தார். அவர் அப்படித்தான் இருந்தார். ஏன்? இயங்கும் சக்தியானது அங்கே இயங்குமுறையை எரியச் செய்தது. அவர், குமாரன்தாமே, இயங்கும் முறையாயிருந்தார், பிதாவோ இயங்கு சக்தியாயிருந்தார். ""கிரியைகளைச் செய்கிறது நானல்ல, அது எனக்குள் வாசமாயிருக்கிற என் பிதாவாயிருக்கிறது. அவர் இயங்கு சக்தியைத் தெறிக்கவிட்டு, காரியத்தை முன்னேறச் செய்கிறார். அவரே அதை நிறைவேற்றுகிறார்."" " "128 ""நான் எப்பொழுதாவது எதையாவது கூறினது..."" ஒரு சமயம் சாமுவேல் ஜனங்களிடம் கூறினது போல, ""நான் கர்த்தருடைய நாமத்தில் எப்பொழுதாவது உங்களிடம் கூறினது நிறைவேறாமல் போனதுண்டா?” பார்த்தீர்களா? ""நான் எப்பொழுது அதைக் கூறினேன், அது எப்பொழுது நிறைவேறவில்லை?"" " 129 'ஓ, நீர், நீர் கூறினது நிறைவேறும், ஆனால் எங்களுக்கு எப்படியும் ராஜா வேண்டும்” என்றனர். 130 அந்தவிதமாகத்தான் அது இன்றைக்கும் உள்ளது. ஜனங்கள் தங்களுடைய அற்பமான கருத்துக்களை பற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுடைய கோட்பாடுகளைப் பற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் இதைப் பற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். அப்படியானால் நம்முடைய நாளில் ஒரு எழுப்புதலைக் குறித்து பேசிக்கொண்டிருக்கையில், அது குழப்பமடைந்துள்ள நிலையில், நமக்கு எப்படியொரு எழுப்புதல் உண்டாயிருக்க முடியும்? தண்ணீரால் கலக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் அதிலுள்ள மற்ற ஒவ்வொரு காரியமும், எல்லாவிதமான சவர்க்காரங்களும், இந்த எல்லா நவீனமான காரியங்களும் அதில் கலக்கப்பட்டுள்ளன. 131 நான் ஒரு நாள் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அது ஒருவிதமான நவீன சவர்க்காரம் என்று கூறப்பட்டது, “நீங்கள் பாத்திரங்களைக் கழுவ வேண்டியதில்லை, நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம், அவைகளை அங்கேயே முழுக்கியெடுக்க வேண்டும், முழுக்கி அவைகளை வெளியே எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டது. "132 நான், “நான் என் வீட்டில் ஒரு வீரனாக இருக்கப் போகிறேன்"" என்று எண்ணினேன். நான் போய் இந்தப் பொருட்களைக் கொண்ட ஒரு பெட்டியை எனக்கு வாங்கப் போகிறேன். " "133 நான் மனைவியினிடத்தில், ""தேனே, உள்ளே போ, நான் பாத்திரங்களைக் கழுவட்டும்"" என்றேன். " "134 நான், “அவர்கள் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்த விஞ்ஞானிகளுக்குத் தெரியும். எப்படி என்று நான் அவளுக்குக் காண்பிப்பேன். நான், அவள்...நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அவள் புரிந்து கொள்ளும் வரையில், அதை அப்படியே உள்ளே முழுக்கி, வெளியே எடுத்து வைக்க வேண்டும், நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான்."" " 135 பிள்ளைகள் காலைச் சிற்றுண்டிக்காக முட்டைகளை உண்டனர். நான் இந்தச் சவர்க்காரத்தை அங்கே ஊற்றி, அதை அதில் முழுக்கி, அதை முழுக்கி வெளியே எடுத்தேன், மேலும் அதை உள்ளே முழுக்கி, அதை முழுக்கி வெளியே எடுத்தேன். அது இன்னமும் முட்டையாகவே இருந்தது. ஆம், ஐயா. நான் தொலைக்காட்சியில் கேட்கும் எந்தக் காரியத்தையும், இனிமேல் நான் நம்புவதில்லை. இல்லை ஐயா. இல்லை, இல்லை. இல்லை, உண்மையாகவே. 136 அந்தக் காரணத்தினால்தான் மனிதனால் உண்டாக்கப்பட்ட எந்த முறைமையும் நிலைத்திருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். தேவன் ஒரு வழியை அருளியிருக்கிறார். அது மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் அல்ல; ஆனால் அது இயேசு கிறிஸ்து, புதிய பிறப்பின் மூலம், அந்த வேதாகமத்தை விசுவாசித்தல். அது தேவனால் அருளப்பட்ட வழியாயுள்ளது, அவர் பெற்றுள்ள ஒரே வழி, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் உள்ளது. தம்முடைய குமாரனில், அவர் தம்முடைய நாமத்தைத் தரிப்பித்தார். அவருடைய, தேவனுடைய நாமம் இயேசு என்பதாகும், ஏனென்றால் அவர் தம்முடைய பிதாவின் நாமத்தில் வந்தார். எனவே அது தேவனுடைய நாமமாயிருக்கும், ஏனென்றால் அவர் தேவனாயிருந்தார். "137 இப்பொழுது கவனியுங்கள், இந்த மகத்தான தேவனுடைய அசைவாடும் வல்லமை ஒரு தேவனுடைய குமாரனுக்குள் வரும்போது, அது அவனை உயிர்ப்பிக்கிறது, ஜீவ ஆவி அவனுக்குள் பிரவேசிக்கிறது. அப்படியானால் அது என்ன செய்கிறது? அது இப்பொழுதே அவர்களை உன்னதங்களில் அமரச் செய்கிறது. அவர்கள் ""இருப்பார்கள்"" என்றல்ல. நாம் இப்பொழுது இருக்கிறோம். இப்பொழுது நாம் ஏற்கனவே உயிர்த்தெழுந்துள்ளோம், இயங்கு சக்தியும், இயங்கு முறையும் கிரியை செய்து, நம்மை உயிர்ப்பித்து, நாம் தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக உயிர்ப்பிக்கப்படுகிறோம், அங்கே அவருடைய ஆவி உள்ளது. இப்பொழுது நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் ஒன்றாக உட்கார்ந்திருக்கிறோம்; கிறிஸ்து இயேசுவுக்குள், அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம், அந்த மகத்தான ஆசனத்தில் ஏற்கனவே அக்கினிமயமாகி, மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்பட்டார். நாம் அதன் ஒரு பாகமாக இருக்கிறோம். நீங்கள் மணவாட்டியின் ஒரு பாகமாயிருந்தால், நீங்கள் அப்படித்தான், ஏனென்றால் மணவாட்டி மணவாளனின் ஒரு பாகமாக இருக்கிறாள் என்பதை, நீங்கள் அறிவீர்கள். எனவே அது அதே காரியம் என்பதை நாம் கண்டறிகிறோம், இந்த நாளில் அவள் என்ன செய்ய வேண்டுமென்று முன்னுரைக்கப்பட்டுள்ளதோ, அதைச் சரியாக அவள் செய்வாள். அவள் ஒரு லவோதிக்கேயாவாக இருக்கமாட்டாள், எந்த வகையிலும் ஒரு வெதுவெதுப்பான ஒன்றல்ல. ஆனால் அவள் தேவனுக்காக அக்கினி மயமாக இருப்பாள், அவள் தேவனுடைய ஆவியில் அசைவாடிக் கொண்டிருப்பாள். " 138 இப்பொழுது நாம் அதைக் கண்டறிய இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம், இப்பொழுது அது செய்கிற அதே நேரத்தில், இது நம்மைத் செயல்படச் செய்கிறது; மேலும், நாம் ஒரு காலத்தில் பாவத்திலும், அக்கிரமங்களிலும், சரியாகக் கூறினால், அக்கிரமங்களிலும் மரித்தவர்களாய், அவர்... இந்தக் காலத்தின் அவருடைய வார்த்தைக்கு நாம் ஏகமாய் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம். 139 இப்பொழுது நாம் பண்டைய காலங்களில் இந்த வார்த்தையினால் உயிர்ப்பிக்கப்பட்ட ஒருவரைக் குறித்து, நாம் வியாதியஸ்தருக்கான ஜெப ஆராதனையை நடத்துவதற்கு சற்று முன்பு சிந்தித்துப் பார்ப்போமாக; நாம் ஒரு சில குணாதிசயங்களை எடுத்து, அவர்களுடைய குணாதிசயங்களைக் கவனிப்போம். "140 பழைய ஏற்பாட்டில் ஏனோக்கு என்னும் பெயர் கொண்டவன், தேவனுடைய வார்த்தை அனைத்தையும் காத்துக்கொண்ட ஒரு மனிதனை நாம் இங்கே எடுத்துக் கொள்வோம். அவன் தேவனுடைய வார்த்தையினால் உயிர்ப்பிக்கப்பட்டு, ""அவன் தேவனுக்குப் பிரியமாயிருந்தான்” என்ற ஒரு சாட்சியை உடையவனாயிருந்தான். ஏனோக்கு செய்யும்படி தேவன் கட்டளையிட்ட எந்த ஒரு காரியமும் செய்யாமல் விடப்படவில்லை, அவன் அதைச் செய்தான். " "141 இந்தப் பிற்பகலில் எத்தனை ஏனோக்குகள் இங்கே இருப்பார்கள் என்று நான் வியக்கிறேன், அதாவது, அது தேவனுடைய வார்த்தையில் உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருந்தால்? தலைமுடியைக் கத்தரித்துக் கொண்ட பெண்களில் எத்தனை பேர் உங்களை ஏனோக்கியர் என்று அழைத்துக் கொள்ள முடியும், பாருங்கள், பாருங்கள், தேவன் அதைக் கண்டனம் செய்கிறார் என்பதை அறிந்திருக்கிறீர்களா? ஆண்களாகிய உங்களில் எத்தனை பேர், பெண்கள் அதைச் செய்ய அனுமதித்துவிட்டு, உங்களை ஏனோக்கு என்று அழைத்துக் கொள்ள முடியும்? ஓ, என்னே! அது ஒரு காரியம், ஆயிரக்கணக்கானோரைக் குறித்து என்ன? நாமோ, ""நான் இதைச் சேர்ந்தவன், நான் அதைச் சேர்ந்தவன்” என்று கூறி திணறுகிறோம். நீங்கள் அதைச் சார்ந்திருக்கலாம், ஆனால்...நீங்கள் தேவனால் அளிக்கப்பட்ட ஸ்தானத்திற்குள் வரும் வரை! நீங்கள் அந்த வார்த்தையின் பாகமாக ஆகிவிட்டாலொழிய, உங்களால் அங்கு நுழைய முடியாது. நீங்கள் அதனுடைய பாகமாயிருக்கிறப்படியால், நீங்கள் அதைக் குறித்த எல்லாவற்றிற்கும், எல்லாவற்றிற்கும் கீழ்ப்பட்டிருக்கிறீர்கள். கவனியுங்கள், வேதம் ""தேவனுடைய வார்த்தை” என்று அழைக்கிற இதை நாம் இங்கே வைத்துள்ளோம், இது, இது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. " 142 இப்பொழுது ஏனோக்கு தம்முடைய வார்த்தையோடு தேவனால் அளிக்கப்பட்டிருந்த வழியில் வந்து, ஐந்நூறு ஆண்டுகளாகச் சஞ்சரித்து அவரைப் பிரியப்படுத்தினான் என்று நாம் கண்டறிகிறோம். அந்த இயக்கவியல் அவனுக்குள் மிகவும் பரிபூரணமாயிருந்தது என்பதை நாம் கண்டறிகிறோம், அந்த இயந்திரத்தில் இயங்கும் சக்தி இயங்கத் துவங்கினபோது, அது அவனைப் பூமியிலிருந்து கொண்டு சென்றுவிட்டது. அவன் முதலாவதாக ஆகாய விமானத்தில் பறப்பது போல, பரலோகத்திற்கு பறந்து சென்றான். தேவனுடைய இயக்கவியல் மற்றும் இயங்கும் சக்தியின் பேரில் ஒருமித்து கிரியை செய்து, “அவன் அப்படியிருக்கவில்லை”, ஏனென்றால் தேவன் அவனை மரணமில்லாமல் பூமியிலிருந்து வெளியே எடுத்தார். அது முற்றிலும் உண்மை. அவன் தேவனால் அருளப்பட்ட வழியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். 143 அதேக் காரியத்தை நாம் எலியாவின் பேரில் கண்டறிகிறோம். வயோதிக எலியா, யேசபேலின் வர்ணம் பூசப்பட்ட யேசபேலின் பல முகங்களையும், மற்றும் சிகை அலங்காரங்கள் போன்றவற்றைக் குறித்து அலறவிட்டான், அவர்கள் அந்த நாளைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததைப் போல, அந்த ஸ்திரீகளின் மத்தியில் பாவத்தைக் கடிந்து கொள்வதிலேயே அந்த வயோதிக மனிதன் தன்னுடைய வாழ்க்கையை செலவழித்தான், ஏனென்றால் அவர்கள் ஒரு செயலை நிர்ணயிக்க யேசபேல் என்ற ஒரு ஸ்திரீயை அங்கே அமர்த்தியிருந்தனர். 144 இங்குள்ள உங்களுடைய ஹாலிவுட்டைப் போன்றே, அங்கே உள்ள எல்லா சகோதரிகளையும் அதில் சேர்த்துக் கொள்ளச் செய்துவிட்டீர்கள். மேலும், யேசபேல் இன்னமும் ஜீவிக்கிறாள், உங்களால் சுற்றும் முற்றும் பார்த்து, அவள் அதைச் செய்வதை உங்களால் காண முடியும். அவளும் இன்னமும் கூட, பெரிய வல்லமையில் இருக்கிறாள். 145 அந்த வயோதிக நபர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், அவன் அந்தக் காரியத்தையும் மற்ற ஒவ்வொரு காரியத்தையும் சபித்திருந்தான், தேவனுடைய சித்தத்தில் பரிபூரணமாகத் தரித்திருந்தான் என்பதை இப்பொழுது நாம் கண்டறிகிறோம். மற்ற எல்லா பிரசங்கிமார்களும் பலவீனமடைந்தபோது, அவன் அதனோடு அங்கேயே தரித்திருந்தான். 146 ஒரு நாள் அவன் மிகவும் களைப்புற்றிருந்தான், தேவன் பரலோகத்திலிருந்து ஒரு இரதத்தையும், அக்கினிமயமான குதிரைகளையும் அனுப்பி, அவனை மேலே கொண்டு சென்றார். அவன் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தானே! தேவனுடைய வார்த்தையைத் தன்னுடைய இருதயத்தில் கொண்டு, அவனை உயிர்ப்பித்த அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் அவன் அவ்வளவாய் நிறைந்திருந்தான் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! "147 ""தேவனுடைய ஆவி என்றால், அவர்...” நாம் ரோமர் 11- ல் அல்லது 1:11-ல் கண்டறிகிறோம் என்று நான் நினைக்கிறேன், “இருந்தால்,” அது, ""ஆவி இருந்தால்..."" என்று கூறுகிறது. ரோமர் 8:11-ல், அது, ""இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவி உங்களுக்குள் இருக்குமானால், அது உங்களுடைய அழிவுள்ள சரீரங்களையும் உயிர்ப்பிக்கும். இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவி, அது உங்களுக்குள் இருக்குமானால், அது சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிக்கும்"" என்பதாய் உள்ளது. " "148 அதை உயிர்ப்பிக்கிறதே! உயிர்ப்பித்தல் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? கிரேக்க வார்த்தையின் அர்த்தம், ""மரணத்திற்குப் பிறகு ஜீவிக்கக் கொண்டுவரப்படுதல்"" என்பதாகும். அல்லேலூயா. ஆராதனைக்கான வாசல் உள்ளது. ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுதுகொள்ளுதல், இயங்குதலும் இயங்கும் சக்தியும். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? " "149 ""இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானவர் உங்களில் வாசமாயிருந்தால், அது உங்கள் அழிவுள்ள சரீரங்களை உயிர்ப்பித்து, உயிர்ப்பிக்கும், ஏனென்றால் அது ஏற்கனவே ஜீவனாயிருக்கிறது."" அது உங்களுடைய சரீரத்திற்குள்ளாக வரும்போது, அது உங்களுடைய முழு சரீரத்தையும் அதற்கு உட்படுத்துகிறது. எதற்கு உட்பட்டது? தேவனுடைய வார்த்தை. ""அது உங்களுக்குள் இருந்தால்."" " "150 இப்பொழுது அது உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒரு காரியம், ""பாருங்கள், அது கடந்த நாட்களாய் இருந்தது. மாற்கு 16 உண்மையல்ல, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்த பெந்தெகொஸ்தே கருத்து” என்று உங்களுக்குச் சொல்கிறது என்றால். அது உங்களுக்குள் இருக்கும் தேவனுடைய ஆவி அல்ல. நீங்கள், நீங்கள் எவ்வளவு நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அது தேவனுடைய ஆவி அல்ல. நீங்களோ, ""பாருங்கள், என்னுடைய தாயார், என் தகப்பனார் பல வருடங்களாக இதைச் சேர்ந்தவர்கள், என் சகோதரன்"" என்று கூறலாம். உங்களுடைய உறவினர்கள் போன்றவர்களைக் குறித்து நீங்கள் என்ன கூற விரும்பினாலும், அது அவர்களுக்குச் சரியாக இருந்திருக்கலாம்; ஆனால் அது உங்களுக்காக அல்ல, பாருங்கள், நீங்கள் இந்நாள் வரைக்கும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக வந்து, இந்தக் காலத்திற்கான, இந்தக் காலத்திற்காகப் பொருட்படுகிற வாக்குத்தத்தம். " 151 கவனியுங்கள், இந்த மகத்தான உயிர்ப்பிக்கும் வல்லமை ஏனோக்கின் மேல் விழுந்ததை நாம் கண்டறிகிறோம், அது அவனை உயிர்ப்பித்தது, அவன் மரிக்காமல் வீட்டிற்குச் சென்றான். 152 அது எலியாவைத் தாக்கி, அவன் மரிக்காமல் பரலோக வீட்டிற்குச் செல்லும் வரை அவனை உயிர்ப்பித்தது. 153 அவனுக்குப் பின் வந்த எலிசாவை நாம் கண்டறிகிறோம், அது அங்கே கிறிஸ்துவுக்கும் சபைக்கும் ஒரு மாதிரியாயிருக்கிறது, எலிசா. எலியா நான்கு அற்புதங்களைச் செய்தான், எலிசா எட்டு அற்புதங்களைச் செய்தான். சபையின் மேல் ஊற்றப்பட்டதுபோல, அவருக்கு இரட்டிப்பான பங்கு இருந்தது. [ஒலிநாடாவில் காலியிடம்) பின்னர் அவர்கள் மரித்த ஒரு மனிதனை உடையவர்களாயிருந்து, அதை அவனுடைய எலும்புகளின் மேல் வீசியெறிந்தனர், அப்பொழுது அவன் உயிர்பெற்றான். அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அவனோடு கல்லறையில் இருந்தது. உங்களால் முடியாது... 154 நீங்கள் தேவனுடைய அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையை பெற்றுக்கொள்ளும்போது, அது எப்பொழுதும் அங்குள்ளது, இப்பொழுது அவரோடு உயிர்ப்பிக்கப்படுகிறது. 155 இப்பொழுது நினைவிருக்கட்டும், கிறிஸ்துவுக்குள், நாம் அவருடைய மாம்சத்திலிருந்து மாம்சமாகவும், அவருடைய எலும்புகளிலிருந்து எலும்புமாயிருக்கிறோம். தேவன் கல்வாரியில் கிறிஸ்துவை காயப்படுத்திய போது, அவர் எனக்காகவும் உங்களுக்காகவும் காயப்பட்டார். நாம் அவருடைய மாம்சத்திலிருந்து மாம்சமாகவும், அவருடைய எலும்பில் எலும்பும், அவருடைய சரீரத்தில் சரீரமுமாக, அவருடைய நாமத்தின் நாமமும், அவருடைய மணவாட்டியு மாயிருக்கிறோம். பாருங்கள், நாம் அவருக்குள் இருக்கிறோம், நாம் அவருடைய மாம்சமும், அவருடைய எலும்புகளுமாயிருக்கிறோம். 156 தேவன் நம்மை ஏற்கனவே ஏற்கனவே மறைமுகமான முறையில் எழுப்பியிருக்கிறார். உயிர்ப்பிக்கும் வல்லமை பாவ ஜீவியத்திலிருந்து நம்மை எழுப்பி, நம்முடைய இயல்பை மாற்றினது, அது நம்மைக் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக எழுப்பக்கூடிய சாத்தியமுள்ளதாயுள்ளது, அந்த உயிர்த்தெழுதல் நம்மை முழு முதிர்ச்சியில் பிறப்பிக்கும். "157 இப்பொழுது நினைவிருக்கட்டும், நாம் நம்முடைய சொந்த நாமத்தில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, அவருடைய நாமத்தில் எழுப்பப் பட்டோம். பாருங்கள், நாம் இனிமேல் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. வேதம் இங்கே எபேசியர் 1:21-ல் கூறியுள்ள ""இயேசு கிறிஸ்துவின்” அந்த மகத்தான நாமம், ""வானத்திலும் பூமியிலும் உள்ள இரண்டு குடும்பங்களும் அந்த நாமத்தின்படியே பெயரிடப்பட்டுள்ளன"" என்று கூறப்பட்டுள்ளது. அங்கேதான் தேவன் தம்முடைய நாமத்தைத் தரிப்பித்தார். அது பரலோகத்தில் உள்ள குடும்பத்தின் நாமம். அதுவே பூமியில் உள்ள குடும்பத்தின் நாமம். " 158 ஆவிக்குரிய ஞானஸ்நானத்தினால், ஜலத்தினால் அல்ல; நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம், ஆவியினால், நாம் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம், அது ஆராதிக்கும் ஸ்தானமாகிய கிறிஸ்துவாகும். அப்படியானால், அங்கே உள்ளே இருக்கையில், நாம் இந்த நிலத்தின் மேல் இருக்கிறோம், அது உரிமைப் பத்திரத்தின் சாரம்சத்தைப் போன்றுள்ளது. 159 நீங்களோ, “நான் ஒரு துண்டு நிலத்தை வாங்கினேன்” என்று கூறலாம். நீங்கள் ஒரு உரிமைப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் வரையில் அது உங்களுடையதாயிருக்கவில்லை. ஆனால் நீங்கள் ஒரு உரிமைப் பத்திரத்தை உடையவர்களாயிருப்பீர்களானால், அந்த நிலத்திற்கு எதிராக இருந்த ஒவ்வொரு காரியமும் அழிக்கப்பட்டு விட்டது என்பதையே அது காண்பிக்கிறது. 160 பின்னர் நீங்கள் ஒரு கிறிஸ்தவராகி, கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, அதன்பின்னர், தேவன் உரிமைப் பத்திரத்தை அனுப்பும்போது, உங்களுடைய தகப்பனார் என்ன செய்திருந்தாலும், உங்களுடைய தாயார் என்ன செய்திருந்தாலும், மற்றவர்கள் என்ன செய்திருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதையே அது காண்பிக்கிறது; உங்களுடைய தாய், தந்தையர் குடிகாரர்களாக, விபச்சாரிகளாக இருந்திருக்கலாம்; அது என்னவாயிருந்தாலும், ஒவ்வொரு பாவமும்எடுக்கப்பட்டுவிட்டதே! நீங்கள் ஒரு உரிமைப் பத்திரத்தைப் பெற்றுள்ளீர்கள். அதிலிருந்து உங்களை எதுவுமே தள்ளிவிட முடியாது.பாருங்கள், அந்த நிலத்திலுள்ள யாவும் உனக்குச் சொந்தமானவை! ஆமென். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும்போது, தேவனுடைய ஒவ்வொரு வரமும் சபைக்குச் சொந்தமானதாய் இருக்கிறது. ஆமென். அது ஒரு சாரம்ச உரிமைப் பத்திரமாகும். உங்களுக்கு, அது உங்களுடையது, அது உங்களுக்குச் சொந்தமானது. அது உங்களுடைய அழிவுள்ள சரீரங்களை உயிர்ப்பிக்கிறது. ஓ, என்னே, நாம் அதைக் குறித்து சிந்தித்தால் நலமாயிருக்குமே! "161 பெந்தெகொஸ்தே நாளில் இருந்த அந்த உண்மையுள்ளவர்களை நாம் சற்று பார்ப்போம். அவர்கள் யாவரும் அங்கே மேலறையில் இருந்தனர், அவர்கள் யாவரும் பயமடைந்திருந்தனர். அவர்கள் பெற்றிருந்தனர், அவர்கள் பட்டம் பெற்றிருந்தனர், சரி, ஆனால் அவர்கள் பயந்திருந்தனர். “அப்பொழுது வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கம் உண்டாகி,"" அவர்களுக்கு உரிமை பத்திரத்தின் சாராம்சம் அனுப்பப்பட்டது, ""பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பினது.” அவர்கள் தங்களுடைய எல்லா கோழைத்தனமும் போகும்படி அவர்கள் அவ்வளவு உயிர்ப்பிக்கப்பட்டு... அவர்களில் ஒருவன், அவன் இன்னும் ஒரு பரிசேயன் ஆகவில்லை என்றும், அல்லது அவன் இன்னும் ஒரு சதுசேயனாக இருக்கவில்லை என்றும் மறுதலிக்கக் கூடப் பயந்திருந்தான். ஆனால் அந்தப் பரிசுத்த ஆவி விழுந்து, அவன் இயேசு கிறிஸ்துவுக்குள் அபிஷேகிக்கப்பட்டபோது, அவன் அவருடைய மாம்சத்திலிருந்து மாம்சமாக, அவருடைய எலும்பிலிருந்து எலும்புமாக, அவருடைய வார்த்தையின் வார்த்தையானான். அவன் ஒரு புதிய சிருஷ்டியாயிருந்தான். அவன் ஒரு புதிய நபராயிருந்தான். அது அவனுடைய சரீரத்தை உயிர்ப்பித்தது. " "162 அது என்ன செய்தது என்றும், அது உள்ளே வரும்போது அது உங்களுக்கு என்ன செய்கிறது என்றும் பாருங்கள். அது உங்களை வெளியே சென்று, ""நான் மெத்தோடிஸ்டு. நான் பாப்டிஸ்டு. ஓ, நான் புகைபிடிக்கக் கூடாது என்பதை நான் அறிவேன். நான் இதைப் பெற்றிருக்கக் கூடாது. இந்த விதமான ஆடைகளை நான் அணியக் கூடாது. நான் இதைச் செய்யக் கூடாது. நான் அதைச் செய்யக் கூடாது” என்று கூறச் செய்கிறதில்லை. நீங்கள் அதைச் செய்ய வேண்டிய அளவிற்கு அது உங்களை உயிர்ப்பிக்கிறது. அது உங்களுடைய அழிவுள்ள சரீரங்களை உயிர்ப்பிக்கிறது. " 163 பாருங்கள், அவர்கள் பரலோகத்திற்கு மிக அருகாமையில் பறந்து செல்லுமளவிற்கு, அது அவர்களுடைய சரீரங்களை உயிர்ப்பித்தது, அவர்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டிராத ஒரு பாஷையில் பேசும்படி அவர்களுடைய சரீரத்தை உயிர்ப்பித்தது. அது அவர்களுடைய சரீரங்களை உயிர்ப்பித்தது, அவர்கள் புதிய பரலோக பாஷையில் பேசினர். அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக உயிர்ப்பிக்கப்பட்டனர். தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை அதற்குள் அவர்களை அபிஷேகித்தது. அப்பொழுது அவர்கள் ஆராதனை ஸ்தானத்தில் இருந்தனர். அவர்கள் தொழுதுகொள்ளக் கூடிய ஸ்தானத்திலேயே இருந்தனர். செனெகரீம் அல்லது வேறு எதுவுமோ அவர்களைத் தொல்லைப்படுத்த முடியாது, ஏனென்றால் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் புதிய ஜனங்களாயிருந்தனர். அது அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட பிறகுதான். "164 சிறிய ஸ்தேவானைப் பாருங்கள். அவன் தேவனால் அளிக்கப்பட்ட வழிக்குள் வந்து, தேவனுடைய வல்லமையினால் உயிர்ப்பிக்கப்பட்டான்; வாசலுக்குள், தேவன் அருளியிருக்கிற வழிக்குள் வந்தான். அவர்கள் அவனைக் கொல்லச் சென்று, அவனைக் கல்லெறிந்து கொல்லச் சென்றபோதும், அவன், ""வானம் திறந்திருப்பதையும், இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்றான். அது உயிர்ப்பிக்கும் வல்லமை. அவன் அவருடைய மடிக்குள் உயிர்ப்பிக்கப்பட்டான். " "165 பிலிப்பு, உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்த மற்றொருவனாய் இருந்தான். அவன் அங்கே சமாரியாவில் ஒரு பெரிய எழுப்புதல் கூட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அவன் கிறிஸ்துவுக்குள் வந்த பிறகு, இந்த மகத்தான உயிர்ப்பிக்கும் வல்லமை, ஆயிரக்கணக்கான ஜனங்கள் அவனுக்குச் செவிகொடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தது. மேலும் அவர், ""இப்பொழுது இங்கிருந்து புறப்பட்டு, பிலிப்புவே, நீ இங்கே இந்த வனாந்திரத்திற்கு, இங்கே உள்ள காசாவிற்கு போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அங்கே ஒரு மனிதனைக் கொண்டிருக்கிறேன், நீ சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்"" என்றார். எந்தக் கேள்வியும் இல்லை, எந்தக் கேள்வியுமே இல்லை, அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தான். அவன் கிறிஸ்துவுக்குள் இருந்தான், தேவன் அவனோடு பேசக்கூடிய அருளப்பட்ட ஸ்தானத்தில் அவன் இருந்தான். தேவன் அவனிடத்தில் பேசினார். எந்தக் கேள்வியும் இருக்கவில்லை. " "166 ""பாருங்கள், அவர் என்னிடத்தில் பேசி, நான் சுகமடையப் போகிறேன் என்று என்னிடம் கூறினார், ஆனால், இப்பொழுது எனக்குத் தெரியாது, நான் இன்றைக்கு மிகவும் மோசமாக உணருகிறேன்” எனலாம். ஓ, என்னே! ""பாருங்கள், நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்ததாக அவர் என்னிடம் கூறினார், சில சமயங்களில் நான் அதை நிச்சயமாகவே சந்தேகிக்கிறேன்.” " "167 பிலிப்பு தேவனுடைய சத்தத்தைச் சரியாக அறிந்திருந்தான், ஏனென்றால் அவன் தேவனால் அருளப்பட்ட வழியில் வந்திருந்தான். அவன், ""தேவனே, நான் இங்கே அநேகரை உடையவனாயிருக்கிறேன், நான் நிற்க வேண்டும். நான் அதைச் செய்வதற்கு முன்பு நான் மாநிலப் பேராயரை சந்திக்க வேண்டும். நான் பேராயரிடம் போய்ப் பேச வேண்டும்"" என்று அதுகுறித்து தேவனிடத்தில் கேள்வி கேட்கவே இல்லை, அதைக் குறித்து ஒன்றுமே இல்லை. அவன் தேவனிடத்தில் சிந்தை கொண்டவனாய், அவன் வனாந்திரத்திற்குள்ளாகச் சென்றான். " "168 அவன் ஒரு மனிதனைக் கண்டான், ஒரு மந்திரி, ஒரு எத்தியோப்பியன், ஒரு கறுப்பு மனிதன் வந்து கொண்டிருக்கையில், ஏசாயாவில் உள்ள வேதவசனத்தைப் படித்துக் கொண்டிருந்தான். மேலும் அவன், ""நீங்கள் என்ன வாசிக்கிறீர்கள் என்று உங்களுக்குப் புரிகிறதா?” என்று கேட்டான். " "அதற்கு அவன், ""யாராவது எனக்குப் போதித்தாலொழிய என்னால் எப்படி புரிந்து கொள்ள முடியும்?” என்றான். " 169 பிலிப்பு இரதத்தின் மேல் ஏறிக் கர்த்தரைக் குறித்து அவனிடத்தில் பேசத் துவங்கினான். "170 அவன், ""இங்கே தண்ணீர் உள்ளது, ஞானஸ்நானம் பெறுவதற்கு எனக்குத் தடையாக இருப்பது எது?” என்று கேட்டான். " "171 அவன், ""நீ உன் முழு இருதயத்தோடும், உன் ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் விசுவாசித்தால் நலமாயிருக்கும்” என்றான். இரதத்திலிருந்து இறங்கி அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். " 172 பிலிப்பு அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்தவனா யிருந்தபடியால், அவர் அவனை அவனுடைய பார்வையிலிருந்து எடுத்துக் கொண்டார். சிந்தியுங்கள்! அவனுடைய சாவுக்கேதுவான சரீரத்தில், அவனுடைய மாம்ச சரீரம் அந்த மந்திரியின் பார்வையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அது உண்மை என்று நான் நம்புகிறேன். தேவன் அவனை வேறு எங்காவது கொண்டு செல்ல முடியும், அங்கு அவருக்குத் தேவை இருந்தது. அவன் எடுத்துக்கொள்ளப்பட்டான். 173 நீங்கள் கிறிஸ்துவுக்குள், தேவனுடைய ஸ்தானத்தில் இருக்கும்போது, மரணம் அந்தக் காரியத்தை உங்களிடத்திலிருந்து எடுத்துப் போட முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். "174 இங்கே பாருங்கள், மோசே அதை உடையவனாயிருந்தான். அவன் கர்த்தருடைய வார்த்தை வந்த ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். எத்தனை பேர்...எத்தனை கோராகியர்கள் எழும்பி, ""நமக்கு ஒரு பெரிய ஸ்தாபனம் தேவை. இப்பொழுது நீங்கள் ஒரே பரிசுத்த மனிதன் என்ற ஸ்தானத்தை எடுக்க முயற்சிக்கிறீர்கள்” என்றனர். தேவன், ""உன்னை வேறு பிரித்துக்கொள், நான் அவனை விழுங்கிவிடுவேன்” என்றார். தாத்தானுடைய காரியங்கள் போன்றவை அவனைத் தொல்லைப் படுத்தவில்லை, அவன் தொடர்ந்து சென்றான். " 175 மோசே மரித்து, தூதர்களால் அடக்கம் பண்ணப்பட்டபோது, அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அவன்மேல் தங்கியிருந்தது. ஏனென்றால், எண்ணூறு ஆண்டுகள் கழித்து, இங்கே அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் இயேசுவிடம் பேசிக்கொண்டிருக்கிறான். அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அப்பொழுதும் அவன்மேல் இருந்தது. அது தேவனுடைய ஆராதனை ஸ்தானம். 176 “என்ன சொல்கிறீர்கள்? நீ எப்படி அறிந்து கொண்டாய்?” அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வந்தது. அவன் தன்னுடைய காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருந்தான். ஆமென். 177 பாருங்கள், நீங்கள் மரிக்க முடியாது, நீங்கள் உயிர்ப்பிக்கப்பட்டீர்கள். ஓ, நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பது அல்ல, நீங்கள் ஏற்கனவே அவ்வாறு இருக்கிறீர்கள் என்பதை சபையானது மாத்திரம் புரிந்துகொள்ள முடிந்தால் நலமாயிருக்குமே! அது பிசாசு உங்களை அதிலிருந்து கொள்ளையடிக்க முயற்சிக்கிறதாகும். "178 ""சரி, இப்பொழுது நான் உங்களுக்குக் கூறுவேன். நான் இதைச் சேர்ந்தவன்” என்று கூறுகிறீர்கள். நீங்கள் எதைச் சார்ந்திருந்தாலும் கவலைப்படாதீர்கள். " 179 நீங்கள் ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர்ப்பிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவுக்குள், பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, புதுப்பிறப்பூட்டப்பட்டு, பிறக்க வேண்டும். உங்களுக்குள் இருக்கும் உங்களுடைய ஆவி, வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் “ஆமென்” என்று உச்சரிக்கும். அதற்குப் புறம்பாக, ஏதோ ஒன்றுக்கு, அது—அது அதனுடைய தலையை அசைத்தால், நீங்கள் அந்த ஆவியை வெளியேற்றுங்கள். தேவனுடைய வார்த்தையை விவாதிப்பது தேவனுடைய ஆவி அல்ல. அது தேவனுடைய வார்த்தையைக் காத்துக் கொள்ளும். அது அதை விசுவாசிப்பது மாத்திரமல்ல, ஆனால் அது அதை ஜீவிக்கச் செய்கிறது. அது தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறது. ஆம், ஐயா. 180 பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களையும் கூடக் கவனியுங்கள். மறைமுகமாக, பழைய பலியின் கீழ், அவர்கள் இந்தப் புதிய ஒன்று வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தனர், அவர்கள் தேவனை நோக்கி ஒரு நல்ல மனசாட்சியை உடையவர்களாயிருந்தனர். மத்தேயு 27-ல், நமக்குச் சொல்லப்பட்டபடி இயேசு உயிரோடெழுந்து கல்லறையை விட்டு வெளியே வந்தபோது, ஒரு சில வாரங்களுக்கு முன்னர் நாம் ஈஸ்டரைக் கொண்டாடினோம், பூமியின் தூளில் உறங்கிக் கொண்டிருந்த பரிசுத்தவான்கள் அநேகர் அவருடைய உயிர்த்தெழுதலில் எழும்பி, நகரத்திற்குள் வந்து அநேகருக்குக் காணப்பட்டனர். அவர்கள் என்னவாயிருந்தனர்? அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் வெளிப்படுத்துதல்களாயிருந்தனர். அந்தப் பலியின் கீழ் தேவன் சந்திக்கும் ஒரே ஸ்தானம். 181 இப்பொழுது முதலாம் தெசலோனிக்கேயர் 4:16-ல், வேதமும் கூட, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள், அவர் மீண்டும் வரும்போது, இப்பொழுது அவருக்குள் உயிர்ப்பிக்கப்பட்டவர்கள், அவரோடு வருவார்கள் என்று கூறியுள்ளது. நீங்கள் எப்படி அவருக்குள் பிரவேசிக்கிறீர்கள்? ஆவிக்குரிய அபிஷேகத்தினால், தேவனுடைய வல்லமையினால், அவர் அந்த ஸ்தானத்தில், இயேசுவில் சந்திக்கிறார். இப்பொழுது இயேசு தேவனால் அருளப்பட்ட வழியாய் இருக்கிறார். "182 இப்பொழுது கவனியுங்கள், அவர் என்னவாயிருந்தார் என்பதை இயேசு மிகவும் நிச்சயமுடையவராயிருந்தார்! அவர் தேவனுடைய குமாரன் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் கன்னிப் பிறப்பென்று அறிந்திருந்தார். ஒவ்வொரு வேதவாக்கியமும் அவர் மூலமாகத் தன்னை வெளிப்படுத்தினது என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அதை மிகவும் பரிபூரணமாக அறிந்திருந்தபடியால், அவர் அந்த நாளில், ஆலயத்தைக் கட்டுபவர்களிடத்தில், ""நீங்கள் இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், நான் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவேன்” என்று கூறினார். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். “அதை இடித்துப் போடுங்கள், நான் அதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவேன்” என்றார். ஏன்? அது எழுதப்பட்ட அவருடைய வார்த்தையாயிருந்தது. " "183 தாவீது, ""நான் என்னுடைய பரிசுத்தரை பாதாளத்தில் விடேன், அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடேன், என் பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்” என்றான். " "184 இப்பொழுது, அது அவர்தான் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவருடைய சிந்தையில் எந்தக் கேள்வியும் இல்லை. எழுபத்திரண்டு மணி நேரத்தில் சரீரம் அழுகிப் போகிறது என்பதை அவர் அறிந்திருந்தார், அந்த எழுபத்திரெண்டு மணி நேரத்திற்குள் அவர் மீண்டும் ஜீவனண்டை வரப்போவதாயிருந்தார், எனவே அவர், ""நீங்கள் இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், நான் அதை மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் எழுப்புவேன்"" என்றார். ஏன்? அவரைக் குறித்து வார்த்தை எழுதப்பட்டிருந்தது. அது அவரைக் குறித்து எழுதப்பட்டிருந்தது, ஏனென்றால் அவர் அந்த நாளுக்கான எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுத்துதலாயிருந்தார். " "185 சரி, அங்கே இருக்க வேண்டும், அல்லேலூயா, சகோதரனே, இன்றைக்கு தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை எங்காவது இருக்க வேண்டும். அதேக் காரியம் தான், ஏனென்றால் அவர் இந்நாட்களைக் குறித்துப் பேசினார், இந்நாட்களில் என்ன சம்பவிக்கும் என்று அவர் கூறினார். அவர் ஏற்கனவே நமக்குக் கூறியிருக்கிறார். என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை நாம் அறிவோம். அது உங்களில் வெளிப்படுத்தப்படுகிறதை நாங்கள் காண்கிறோம், அப்படியானால் நீங்கள் தேவனுடைய சபையில் இருக்கிறீர்கள். அதற்குப் புறம்பாக, நீங்கள் உங்களை, ""மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு” என்று அழைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு எதையாவது அழைத்துக் கொள்ளலாம், அது ஒருபோதும் கிரியை செய்யாது. ஒரே ஒரு சந்திக்கும் ஸ்தானம் மாத்திரமே இருந்தது, அது கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தது. இன்றைக்கு, ஓ, இன்றைக்கு எப்படி அபிஷேகம் பண்ணப்பட்டு, உள்ளே பிரவேசிக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் காண வேண்டுமென்று நான் விரும்புகிறேன். மணவாட்டி அவளுடைய கணவனின் ஒரு பாகமாயிருக்கிறாள். சபை வார்த்தையின் ஒரு பாகமாக, வெளிப்படுத்தலாக உள்ளது. " 186 இப்பொழுது நீங்கள் எந்தச் சபையில் இருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு ஸ்தாபனத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் அவ்வாறிருந்தால், நான் இப்போது உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன், நீங்கள் லவோதிக்கேயாவில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால், நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள், நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய சபையில் இருந்தால், அவர் தம்முடைய நாளில் செய்த அதே காரியங்களின் வெளிப்படுத்துதலோடு இந்த நாளில் இங்கே திரும்பி வருவார், அது செய்யும் என்று அவர் கூறின அதேக் காரியத்தைச் செய்யும். அப்படியானால் அதுவே உண்மையான சபையாகும். நீங்கள் ஆவிக்குரிய ஞானஸ்நானத்தின் மூலம் அதற்குள் பிரவேசிக்கிறீர்கள், சேர்ந்து கொள்வதன் மூலம் அல்ல, இன்னும் சிலவற்றின் மூலமாக அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியினால் அவருடைய சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுவதன் மூலமேயாகும். சரி. நாம் செய்யும்படி அவர் விட்டுச் சென்றிருக்கிற தேவனால் அளிக்கப்பட்ட ஒரே வழி அவருடைய சரீரத்திற்குள்ளாக, அவருடைய ஆவியினாலே ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்பதாகும். "187 இயேசு பரிசுத்த யோவான் 14:12-ல், “அவன் என்னில் இருக்கையில், விசுவாசிக்கிறவன்!” என்று கூறினார். அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று ஜனங்கள் கூறுவதில் வியப்பொன்றுமில்லை, அவர்கள் இந்தக் காரியங்களைக் கூறுவதில் வியப்பொன்றுமில்லை. ""என்னை விசுவாசிக்கிறவன் என்மேல் விசுவாசம் என்றல்ல, என்னை விசுவாசித்தால், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்."" ஏன்? அது அவருடைய ஜீவன். அது அவருடைய இயங்கு முறையில் உள்ள அவருடைய இயங்கும் சக்தியாயுள்ளது, அது உங்களுக்குள் உள்ளது, அது அந்த அக்கினியை எரியச் செய்கிறது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கிரியைகளைச் செய்யச் செய்கிறது. அதாவது, அவருடைய இயங்கு சக்தியினால், இயங்கு முறையில் உள்ள அவருடைய வார்த்தையை, கிரியை செய்யும்படி, அவருடைய ஆவியினாலே என்னை உயிர்ப்பித்துள்ளது. எபிரெயர் 13:8-ல் ""இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.'' " "188 இப்பொழுது மாற்கு 17-ம் அதிகாரம், பரிசுத்த மாற்கு 30-ம் வசனம். கவனியுங்கள், முடிக்கப் போகிறோம். இயேசு இந்தக் கடைசி நாட்களில் இந்தக் காரியங்களை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், அதாவது அவர் ""நேற்றும் இன்றும் மாறாதவராயிருக்கிறார்.” அவர் மல்கியா 4-ல், ""கடைசி நாட்களில் மக்களின் இதயங்களைத் திருப்புவதாக, பிதாக்களின் விசுவாசத்திற்குத் திரும்புவேன்” என்று வாக்களித்தார். அவர் அதை வாக்குப்பண்ணினார். அவர் வேதாகமத்தில் அநேக இடங்களில் அவர் செய்வதாக வாக்களித்துள்ளார். ""இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் எப்பொழுதும், உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன்"" என்றார். மீண்டும் பரிசுத்த லூக்கா, 17:30-ல் கவனியுங்கள், ""சோதோமின் நாட்களில் நடந்தது போல!” " 189 சோதோமில் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? கலிபோர்னியாவில் பாருங்கள்; கலிபோர்னியாவில் மட்டுமல்ல; அமெரிக்காவைவில் பாருங்கள் அமெரிக்காவில் மாத்திரமல்ல, உலகம் முழுவதும். 190 இந்த வாலிப பைத்தியக்காரங்களைப் பாருங்கள்! ஏன், நாங்கள் ஒரு...அன்றொரு நாள் நான் உங்களிடம் கூறினேன், நான் வசிக்கும் அரிசோனாவிலுள்ள பள்ளிகளை அவர்கள் அங்கே ஆராய்ந்து கொண்டிருந்தபோது, பள்ளியில் பயிலும் பிள்ளைகளில் எண்பது சதவிகிதம் மனவளர்ச்சி குன்றியவர்கள். அவர்களுடைய பிள்ளைகள் என்னவாயிருப்பார்கள்? நமக்கு இன்னொரு சந்ததி இருக்க முடியாது. நாம் முடிவில் இருக்கிறோம். இந்தக் காரியங்கள் சம்பவிக்கும் என்று இயேசு கூறினார். 191 எல்லா தொலைக்காட்சிகளும், மற்றவைகளும் இந்த கட்டுக் கதையான காரியங்களை ஒழுங்குபடுத்துவதைப் பாருங்கள். ஒரு காலம் வரும், நான் கணிக்கிறேன், மக்கள் முற்றிலும், முற்றிலும் பைத்தியக்காரர்களாக இருப்பார்கள், உலகம் அப்படியே இருக்கும். இன்றைய திரைப்படங்களில் அவர்கள் காண்பிப்பது போன்று அருவருப்பான காட்சிகளைப் பற்றி வேதம் பேசுகிறது, சில வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களின் முட்டைகள் அவைகள் பூமியில் பல்லாயிரம் கோடி வருடங்களாக ஜீவித்து, குஞ்சு பொறித்து வெளியே வருகிறது, சில என்ன நடக்கப் போகிறது என்பதற்கு அது ஒரு சிறிய காரியம் நரகம் திறக்கப்பட்டு, பிசாசு தன்னுடைய எல்லா இரகசியமான காரியங்களோடும் வெளியே வரும்போது, ஸ்திரீகளைக்... இல்லை ஸ்திரீகளைப் போன்ற தலைமுடியுடன் கூடிய வெட்டுக்கிளி, சிங்கங்களைப் போன்ற பற்களையும் உடையவைகளாயிருந்தன. ஏன், உலகம் முழுவதுமாக, முற்றிலும் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். அது இப்பொழுது அதிலிருந்து கிட்டத்தட்ட ஒரு பாகை மாத்திரமேயன்றி வேறல்ல. 192 ஓ, தேவனுடைய மகிமைக்காக, கர்த்தராகிய இயேசுவின் வருகைக்காக, பரிசுத்த ஆவிக்காக, அவ்வாறு அறிந்தவர்களுக்காக, ஜீவனுள்ள தேவனுடைய ஜீவனுள்ள பிரசன்னத்திற்காக! "193 இயேசு அங்கே பரிசுத்த மாற்குவில் கூறினார், அவர், 'அந்நாளில் மனுஷகுமாரன் வெளிப்படுவார்” என்றார். இப்பொழுது, தேவனுடைய குமாரன் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் மனுஷகுமாரன், தேவ குமாரன், தாவீதின் குமாரன் என்ற மூன்று குமாரருடைய நாமங்களில் வந்தார். அவர் பூமியில் இருந்தபோது, அவர் மனுஷகுமாரனாக வந்தார், அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார். மனுஷகுமாரன் ஒரு தீர்க்கதரிசி. யோகோவா தாமே தீர்க்கதரிசி களையும், எரேமியாவையும் மற்றவர்களையும் அழைத்து, ""மனுஷபுத்திரனே, நீ எதைக் காண்கிறாய்?"" என்று கேட்டார். இயேசு வந்தார், ஏனென்றால் அவர் மனுஷகுமாரன் என்ற முறையில் வேதவாக்கியத்தின்படி வர வேண்டியதாயிருந்தது. மோசே, ""உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்” என்றான். அவர் ஒரு தீர்க்கதரிசியாக, மனுஷகுமாரனாக இருக்க வேண்டியதாயிருந்தது. " 194 ஆனால் அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, இப்பொழுது அவர் தேவனுடைய குமாரனாக, இயற்கைக்கு மேம்பட்ட பரிசுத்த ஆவியாக இருந்து வருகிறார். "195 ஆனால் அவர் கடைசி காலம் வருவதற்கு சற்று முன்னர், உலகம் சோதோமில் இருந்தது போன்று இருக்கும் என்று வாக்களித்தார், ஒரு மனிதன் மனித உருவில் இறங்கி வந்தபோது; அவர்கள் மூன்று, இரண்டு தூதர்கள் மற்றும் தேவன்தாமே. அது தேவனாயிருந்தது. வேதம் அதைக் கூறியுள்ளது. இப்பொழுது அவர் இறங்கி வந்து, சாராள் இருந்த கூடாரத்திற்கு தம்முடைய முதுகைத் திருப்பி, அவர் தம்மை அங்கே வெளிப்படுத்தினார், சாராள் கூடாரத்தில் என்ன நினைத்துக் கொண்டிருந்தாள் என்பதை ஆபிரகாமிடம் கூறினார். அது சரியா? இப்பொழுது, இயேசுதாமே, ""மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலே,"" என்றார். வேறு வார்த்தைகளில் கூறினால், ""மனுஷகுமாரன், இயேசு கிறிஸ்துவின் ஊழியம் தாமே."" " 196 சபையானது லூத்தரின் மூலமாக நீதிமானாகுதல் மூலமாகவும், வெஸ்லியின் மூலமாகப் பரிசுத்தமாக்கப்படுதல் மூலமாகவும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினூடாகவும், பெந்தேகோஸ்தேயினர் மூலமாகவும், மனுஷகுமாரனின் பரிபூரணத்திற்குள் சென்று, கணவனும் மனைவியும் ஒரே நபர்களாக இருக்கும்பொழுது, தேவன் தம்முடைய மணவாட்டிக்குள்ளாக, தம்முடைய சபைக்குள்ளாக அவ்வண்ணமாய் வெளிப்படுத்தப்படுவார், அவர்கள் இருவரும் ஒரே விதமாக இருப்பார்கள், அவர்கள் ஒருவரே. இப்பொழுது நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நீங்கள் காணலாம். 197 பாரம்பரியங்களையும் கோட்பாடுகளையும் பற்றிக் கொள்ளாதீர்கள். அவர்கள் தங்களுடைய நாளில் சரியாக இருந்தனர், ஆனால் அந்த மலர் இப்பொழுது ஒரு மலராக மலர்ந்துள்ளது. இது விதையின் நேரம். அது உண்மை. "198 இயேசு இந்தக் காரியங்களை வாக்குத்தத்தம் செய்தார். இப்பொழுது, தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை நமக்கு முன்பாக ஜீவிக்கச் செய்து, அது நமக்குள் இருப்பதையும், அவருடைய ஆவி நமக்குள் ஜீவித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் காணும்போது, அதுவே ஒரே ஆராதனையின் முறை, ஒரே ஆராதனையின் ஸ்தானம், நீங்கள் ஆராதிக்கக்கூடிய ஒரே உண்மையான வழி, “கிறிஸ்து இயேசுவுக்குட் பட்டவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார். இயேசு, “நான் செய்கிற காரியங்களை நீங்களும் கூடச் செய்வீர்கள்” என்றும், கடைசி நாளில் அவர் என்ன செய்வார் என்றும் கூறினார். அது எப்படியாய் இந்தக் காலத்தினூடாக வந்தது, வெளிச்சமோ, பகலோ, ஒரு இருளடைந்த நேரத்தைப் போன்று இருக்கும், ஆனால், ""சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்"" என்றார். " 199 சூரியன் கிழக்கில் உதயமாகி மேற்கில் அஸ்தமிக்கிறது. கிழக்கில் உதிக்கும் அதே சூரியன் மேற்கில் அஸ்தமிக்கிறது, நாகரீகமும் அதனுடன் பயணித்துள்ளது. அது மூன்று நீர்நிலைகளுக்கு மேலாக, மூன்று விதமான ஞானஸ்நானத்தின் வழியாகப் பயணித்தது. ஓ, ஆம், ஆசியாவிலிருந்து, ஐரோப்பாவிற்குள்; ஐரோப்பாவிலிருந்து இங்கிலாந்திற்குள்; இங்கிலாந்திலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குள் நுழைந்தது. 200 இப்பொழுது நாம் மீண்டும் நேராக திரும்பி வந்து, இங்கே இந்த பிற்பகல் மேற்கு கடற்கரையில் அமர்ந்து, அந்தகாரத்தில் எல்லா வல்லமைகளின் பாவ தடுப்புச்சுவர் இங்கு குவிந்துள்ளது. இந்தத் திரைப்படங்களும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளும், அங்கே ஆண்கள் பெண்களை முத்தமிடுவதைக் காண்பித்து, சிறுமிகளின் சிந்தைகளை விஷமாக்குகின்றன. 201 ஒரு பெண்ணை முத்தமிடும் எந்த மனிதனும் ஒழுக்க ரீதியில் அவளை மணந்து கொள்ள கடமைப்பட்டவன் என்பதை நீங்கள் அறிவீர்களா? இது மறைமுகமான ஒரு பாலுறவு செயலாக இருக்கக்கூடும். நிச்சயமாக, அதுதான். ஆம், ஐயா. அது என்ன? அது ஒரு மனிதனின் உதடுகளில் உள்ள ஆண் சுரப்பிகள், பெண் சுரப்பிகள். ஆண் மற்றும் பெண் சுரப்பிகள் ஒன்று சேரும்போது, அது பாலுணர்வு. 202 ஹாலிவுட்டைப் பாருங்கள், இங்கே பூங்காக்களில் படுத்திருக்கும் சிறு பெண்களைப் பாருங்கள், பையன்கள் இந்தப் பெண் பிள்ளைகளோடு உருண்டு கொண்டு, அதைப் போன்ற காரியங்களைச் செய்து, பாடற் குழுக்களிலும் கூடப் பாடுகின்றனர். இந்த எல்விஸ் பிரெஸ்லி போன்றவர்கள், இன்றைக்கு நாம் பெற்றுள்ள, அது அமெரிக்காவின் பெயருக்கு நம்முடைய முன்னோர்கள் சண்டையிட்டு, இரத்தம் சிந்தி, மரித்ததற்கு ஒரு அவமானமாயுள்ளது. "203 ஆனால் ஒவ்வொரு இராஜ்ஜியமும் கைவிடப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஏனென்றால் மானிட இருதயத்தில் தேவனுடைய இராஜ்ஜியம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினாலும், இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தினாலும். கிறிஸ்து தம்முடைய மணவாட்டியிடம் வந்து, ஒரு இராஜ்ஜியத்தை இங்கே பூமியின் மேல் ஸ்தாபிப்பார், அது ஒருபோதும் குறைவுப்படாது. நீங்கள் எப்படி இந்த இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்கிறீர்கள்? நீங்கள் அதற்குள் பிறந்திருக்கிறீர்கள். அது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்...நீங்கள் எப்படியொரு இராஜ்ஜியத்தை சேர்ந்திருந்து, இராஜாவுடன் இணங்காதிருக்கிறீர்கள்? பாருங்கள், நீங்கள்...இராஜா வார்த்தையாயிருக்கிறார். ""ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” " 204 அவர் மனுஷகுமாரன் என்பதை அவர்கள் எப்படி அறிந்து கொண்டனர்? அவர் அங்கே கூட்டத்தாரை நோக்கிப் பார்த்து, அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருந்தனர் என்பதை அறிந்துகொள்வார். அது உண்மையென்று நாம் அறிவோம். அவர் இன்றைக்கும் மாறாதவராயிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? "205 பில்லி ஏதாவது ஜெப அட்டைகளைக் கொடுத்தானா? அந்த ஒன்றை நான் அவனிடம் கேட்க மறந்துவிட்டேன். அவன் ஜெப அட்டைகளைக் கொடுத்தானா? [சபையோர், ""ஆம்"" என்கின்றனர்) அவன் ஜெப அட்டைகளைக் கொடுக்கிறான். சரி. " 206 நான் உங்களுக்குக் கூறுவேன். உங்களுக்குப் போதிய விசுவாசம் இருந்தால், வாக்குத்தத்தம் பண்ணின தேவன், தம்மை இங்கே தேவனாக நிரூபிக்க முடியும் என்று விசுவாசிக்க எனக்கு விசுவாசம் உண்டு, எந்த நபரும் இந்த மேடைக்கு வராமல். ஜீவனுள்ள தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நிமித்தமாக, நான் முன்முயற்சி எடுக்க உணருகிறேன். இங்கே பாருங்கள், நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் காண்பிக்கட்டும். இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையை, நாம் அதை உபயோகிக்கப் போகிறோம். நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். உங்களுக்குக் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை உண்டு என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.) சரி, வியாதியஸ்தர் மேல் வைத்துள்ள உங்கள் கரங்களுக்கு என்ன நேரிட்டது? "207 பெந்தெகொஸ்தே நாளில் அந்தச் சீஷர்கள் அவர்கள்மேல் உயிர்ப்பிக்கும் வல்லமையை பெற்றுக்கொண்டபோது, அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் வெளியே சென்று வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்தபோது, அவர்கள் சுகமடைந்தனர். இயேசு மாற்கு 16-ல், ""அது உலகத்தின் முடிவுபரியந்தம் தொடரும்” என்றார். அப்போஸ்தலருடைய காலம், எவ்வளவு காலத்திற்கு? ""நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” அது எலியாவின் எலும்புகளிலும், எலிசாவின் எலும்புகளிலும் இருந்த உயிர்ப்பிக்கும் வல்லமையைப் போன்றதாகும். அதே உயிர்ப்பிக்கும் வல்லமை அவர்களை எழுப்பின பரிசுத்தவான்கள் மேலும் உள்ளது. அதே உயிர்ப்பிக்கும் வல்லமை நமக்குள் இருக்குமானால், உங்களுடைய கரங்களை வியாதியஸ்தர் மேல் வையுங்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். " "208 நான் இங்கே கவனித்திருக்கிறேன், நான் பகுத்தறிதலைக் கொண்டிருப்பதை ஏறக்குறைய விட்டுவிட்டு, இனிமேல், என்னுடைய கரங்களை வியாதியஸ்தர் மேல் வைக்கிறேன். நான் கவனித்து வருகிறேன், என்னே, காரியங்கள் நான் ஒருபோதும்..இல்லையென்றால், மூன்றில் ஒரு பகுதியினரைக் கூட நான் பார்க்கவில்லை. இந்த வழியில், நான் எப்போதும் பெற்றிருந்ததைக் காட்டிலும் அதிகமானவற்றை நான் பெற்றுக்கொள்கிறேன். மேலும் நான் தேவனுடைய கரங்களில் என்னை வைத்துக்கொண்டு, நான் ஒரு சிறந்த பலனைக் கண்டடைகிறேன், ""தேவனாகிய கர்த்தவே, நீர் அதை வாக்குத்தத்தம் செய்தீர். அது உம்முடைய வாக்குத்தத்தமாயிருக்கிறது; அது என்னுடையதல்ல, அது உம்முடையது, நீர் அதைச் செய்வதாக வாக்குப்பண்ணினீர். நீர் அதைச் செய்வதை நான் கண்டிருக்கிறேன். நீர் அதைச் செய்யப் போகிறீர் என்று நான் விசுவாசிக்கப் போகிறேன், ஏனென்றால் நான் உம்முடைய சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறேன், அது சத்தியம் என்பதை அடையாளங்காட்ட உம்முடைய ஆவி இங்குள்ளது” என்றேன். ஆமென். அதுதான் ஆராதனையின் ஸ்தானம். அப்பொழுது நீங்கள் ஒரு ஸ்தானத்திற்குள் வருகிறீர்கள், ""எல்லாக் காரியங்களும் கூடும்."" அப்பொழுது நீங்கள் ஒரு ஸ்தானத்திற்குள்ளாகச் செல்கிறீர்கள், உங்களுடைய சாதனைகளுக்காக அதாவது உங்களுடைய- உங்களுடைய நோக்கங்களும் குறிக்கோள்களும், சரியாகத் தேவனுடைய சித்தத்தில் உள்ளது. நீங்கள் உங்களுடைய கரங்களை அங்கு வைத்து, அதை விசுவாசிக்கும்போது, அது சம்பவிக்கப்போகிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? " "209 ஒரு ஜெப அட்டை அழைக்கப்படுவதற்கு முன்பு, அல்லது வேறெந்த காரியமும் அழைக்கப்படுவதற்கு முன்பு, நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்றும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும், நீங்கள் என்ன செய்திருக்கக் கூடாது என்றும், சர்வ வல்லமையுள்ள தேவனால் என்னிடம் கூற முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். அதுவே முன்முயற்சியை எடுத்துக்கொண்டிருக்கிறது, சரி, அது சரிதான் என்பதை நான் அறிவேன், ஆனால் சரியாக அதைத்தான் நாம் செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்) தேவன் அதைச் செய்தால், எத்தனை பேர் அதை விசுவாசிப்பீர்கள்? [""ஆமென்!”] " 210 எனக்கு முன்னால் எனக்குத் தெரிந்த, நான் நினைக்கும், அல்லது எனக்கு உண்மையிலேயே தெரிந்த யாரையும் பார்க்கக்கூடிய ஒரு நபர் கூட இல்லை. இங்குள்ள நாம் யாவரும், அந்நியர்கள் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அறிந்து கொள்பவர்கள், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். கூட்டத்தில் எங்கிருந்தாலும், உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அறிவேன். அது எல்லாவிடங்களிலும், குறிப்பாக மேலே இங்கே உள்ளது என்று நான் யூகிக்கிறேன். இப்பொழுது ஒருக்கால் மற்ற ஜனங்களை...எனக்கு அவர்களைத் தெரியாது. அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தவில்லை. ஆனால் எப்படியாயினும், எனக்கு எனக்கு எனக்கு அவர்களைத் தெரியாது. ரிச்சர்ட் பிளேயர் இங்கே அமர்ந்திருப்பதை நான் காண்கிறேன் என்று நான் நம்புகிறேன். அது சரியென்று நான் நினைக்கிறேன். என்னால் முடியும்...அங்கே கீழே இருளாய் உள்ளது. இந்த வழியில் விளக்குகள் உள்ளன. எனக்குத் தெரியவில்லை. 211 ஆனால் இங்கே பாருங்கள், அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை உங்களுக்குள்ளாக வரும்போது, அது இயேசு கிறிஸ்துவாயிருக்கிறது என்பதை நான் உங்களுக்குக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இயேசு தம்முடைய கரங்களை வியாதியஸ்தர் மேல் வைத்தபோது, அவர்கள் சுகமடைந்தனர். "212 இயேசு ஒரு மனிதனாக, அவரை உயிர்ப்பிக்கும்படி உயிர்ப்பிக்கும் வல்லமையை உடையவராயிருந்தபோது, அவரால் ஜனங்களின் மேல் இருந்த எண்ணங்களை நோக்கிப் பார்த்து, அவர்கள் எதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தனர் என்றும், அவர்கள் என்ன செய்தனர் என்றும் அவர்களிடம் கூற முடிந்தது. அவருடைய முதுகை அவர்களண்டை திருப்பியிருந்தால், “நீங்கள் ஏன் உங்கள் இருதயங்களில் யோசிக்கிறீர்கள்?"" என்று அவர்களிடமும் அதேக் காரியத்தைக் கூறுவார். அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டபோது, அவர், “என்னைத் தொட்டது யார்?"" என்று கேட்டார். அவர் சுற்றிப் பார்த்து, அவளைக் கண்டு, “என்னிடத்திலிருந்து வல்லமை போய்விட்டதை நான் உணருகிறேன். உன்னுடைய விசுவாசம் உன்னை முழுமையாக்கியிருக்கிறது"" என்றார். அதுதான் இயேசு கிறிஸ்து. சபையானது எங்கே உள்ளது என்பதை அது நிரூபிக்கிறது, தேவனுடைய உண்மையான உயிர்ப்பிக்கும் வல்லமை மானிட வர்க்கத்திற்கு என்ன செய்கிறது என்றும் கூறுகிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? " நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 213 அன்புள்ள தேவனே, இந்தப் பிற்பகலில் நாங்கள் இந்த ஒலிபெருக்கிகளில் சாத்தானோடு சண்டையிட்டுள்ளோம், அந்தவிதமான கட்டிடத்தில் உள்ள... எதிரொலிப்பதால் ஜனங்களுக்கு அதில் பாதி கூடக் கேட்பதில்லை என்பதை அறிந்திருக்கிறோம். ஆனால், தேவனே, பரிசுத்த ஆவியானவர் பொருட்படுத்தியிருந்ததை எடுத்துக்கொள்ளும்படி நான் ஜெபிக்கிறேன், கர்த்தாவே, நாங்கள் மரித்துப்போன நம்பிக்கையற்ற ஏதோ ஒரு இழுபறிக் கூட்டமல்ல என்பதை ஜனங்கள் அறிந்துகொள்ளும்படி செய்கிறோம். தேவனே, நாங்கள் இப்பொழுது உயிரோடிருக்கிறோம், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்து எங்களுக்குள் ஜீவிக்கிறார். கர்த்தாவே, நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். 214 நாங்கள் எங்களுடைய சொந்த மகிமையை உரிமை கோருகிறதில்லை. மறுரூப மலையில் இருந்ததைப் போல, அங்கே நாங்கள் ஒவ்வொருவரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறோம். மரித்து மீண்டும் உயிரோடு எழுந்தவர்களுக்கு, மோசே பிரதிநிதித்துவமாக இருந்தான். கடைசி நாளில் எடுத்துக் கொள்ளப்படும் பரிசுத்தவான்களின் உயிர்ப்பித்தலுக்கு, எலியா பிரதிநிதித்துவமாக இருந்தான். ஓ, அவர்கள் அப்பொழுது கண்டனர், அவர்கள் திரும்பிப் பார்த்தபோது, அவர்கள் இயேசுவை மாத்திரமே கண்டனர். கர்த்தாவே, ஜனங்கள் எங்களைக் காண நாங்கள் விரும்பவில்லை என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அந்த நோக்கத்திற்காக இங்கு வரவில்லை. அது வெகுதூரமாயிருப்பதாக! 215 ஆனால், கர்த்தாவே, எங்களுக்கு மத்தியில் இயேசு மகிமைப்படுவதை நாங்கள் காணும்போது, அது எங்களுடைய இருதயங்களை மகிழ்விக்கிறது; அவர் மகிமைப்படுவதை நாங்கள் காணும்போது, அவருடைய வார்த்தையை நாங்கள் காணும்போது, அது அவரே வார்த்தையாயிருக்கிறார்; நாங்கள் அதை இங்கே வேதாகமத்தில் வாசிக்கும்போது, அவர் அதைச் செய்வதாக வாக்குப்பண்ணினார், அப்பொழுது அவர் அதை எங்களுக்குள் சரியாகக் கிரியை செய்வதைப் பார்க்கிறோம், ஓ, தேவனே, அது எப்படியாய் எங்களைத் தாழ்மையாக உணரச் செய்கிறது, அவருடைய ஜீவனுள்ள பிரசன்னத்தை நாங்கள் அறிந்திருக்கிறோம்... 216 நாங்கள் எதிலும் சேரவில்லை அல்லது எதற்காகவும் பேரம் பேசவில்லை. கர்த்தாவே, நித்திய ஜீவனுக்கென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நீர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் அங்கே எங்களை முத்தரித்து, எங்களுடைய சரீரங்களை உயிர்ப்பித்து, எங்களுடைய ஆவிகளை உயிர்ப்பித்து, தரிசனங்களைக் காணவும், தீர்க்கதரிசனம் உரைக்கவும், அந்நிய பாஷைகளில் பேசவும், மகத்தான அடையாளங்களும், அற்புதங்களும் சம்பவிக்கிறதையும் காணும்படி எங்களை உயிர்ப்பித்தார். ஏன், அது ஜீவனுள்ள தேவனாயிருக்கிறது. நாம் அந்தச் சரீரத்திற்குள்ளாக இருக்கிறோம். உலகத்தில் அழிந்து போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கும்; ஆனால் விசுவாசிக்கிற எங்களுக்கு, அது நித்திய ஜீவனுக்கேற்ற தேவனுடைய வல்லமையாயிருக்கிறது. பிதாவே, அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். "217 இப்பொழுதும் கர்த்தாவே, நீர் தேவனாயிருக்கிறீர் என்று இன்று அறியப்படட்டும், நீர் எப்போதும் கூறின ஒரு வார்த்தையைக் குறித்து உம்முடைய சிந்தையை ஒருபோதும் மாற்றவேயில்லை. நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர், அந்த ஒரே-ஒரே வழியைத் தேவன் அளித்திருக்கிறார். தேவன் தம்முடைய நாமத்தை உச்சரித்த ஒரே மனிதன், அவருடைய நாமத்தைச் சுமந்த தம்முடைய சொந்த குமாரனாகிய இயேசு மாத்திரமே; தேவன், யேகோவா, இரட்சகர், இம்மானுவேல், ஆட்டுத் தொழுவத்திற்கு வாசல்; இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர்; வேரும் சந்ததியுமானவர், தாவீதின் வேரும் சந்ததியுமானவர்; விடிவெள்ளி நட்சத்திரம், பள்ளத்தாக்கின் லீலி. ஓ, தேவனே, எவ்வளவு அற்புதமானது! ஏசாயா, ""ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா” என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. ஓ, கர்த்தாவே, உம்மைத் தவிர எங்களுக்கு வேறு பிதா இல்லை. நீர் எங்களுடைய பிதாவாயிருக்கிறீர். நீரே எங்களுடைய தாய். நாங்கள் எப்பொழுதும் இருக்கக்கூடிய, எங்களுக்கு எல்லாமே நீர்தான். இயேசுவானவர் மகிமைப்படுத்தப் படுவதைத் தவிர வேறெதையும் நாங்கள் காணமாட்டோம்! " 218 பிதாவே, நான் இந்தப் பிற்பகலில், நான் இதைக் குறித்து சரியாகக் கூறாமல் இருந்திருக்கலாம், ஆனால் என் இருதயத்தின் உணர்வுகளை எடுத்துக்கொண்டு, எனக்குச் செவிகொடும், அருமையான தேவனே. இயேசு கிறிஸ்து இங்கே இந்த ஆலயத்தில் மகிமைப்படுத்தப்பட்டார் என்று இந்நாளில் கூறப்படட்டும். பிதாவே, இதை அருளும், நீர் உம்முடைய ஆவியினால் அசைவாடுவதைக் காண, நான் இந்தக் கூட்டத்தாரோடு தாழ்மையாய் காத்திருக்கிறேன், ஏனென்றால் நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 219 இப்பொழுது நீங்கள் இந்த ஒரு காரியத்தை எனக்காகச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உங்களை ஒரு பயபக்தியான கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். உங்களுடைய ஜீவியத்தில் நீங்கள் எவருக்கும் பதில் கூறக்கூடிய கடைசி முறை இது என்பதைப் போன்று நீங்கள் எனக்குப் பதிலளிக்க நான் விரும்புகிறேன். அது சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவனுடைய பிரசன்னத்தில் ஒரு சபையோ அல்லது ஒரு ஸ்தாபனமோ அங்கீகரிக்கப்பட முடியாது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஒருவரும் இல்லை. இயேசு கிறிஸ்துவுக்குள் பிறந்தவர்கள் மாத்திரமே அவருடைய நாமத்தைத் தரித்துக்கொள்வர்! அது உண்மை. "220 நீங்கள் ஞானஸ்நானத்தினால் அல்ல, நீங்கள் அங்கே பிறக்கும்போது அவருடைய நாமத்தை நீங்கள் தரித்துக்கொள்ளுகிறீர்கள். உங்களால் அவருடைய நாமத்தில் ஞானஸ்நானம் பெற முடிந்தாலும், ஆனால் அது அவருடைய நாமத்தைத் தரித்துக்கொள்வதில்லை. நீங்கள் அவருடைய நாமத்தை ஜலத்தினால் அல்ல, பிறப்பின் மூலமாகத் தரித்துக் கொள்ளுகிறீர்கள். பாருங்கள், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள், ஆம், ஐயா, ஐக்கியத்திற்குள்ளாக; ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியினால் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள். எனவே நீங்கள் நூறு முறை ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளலாம், நீங்கள் எந்த விதத்திலும் விரும்பினாலும், வேறுவிதத்திலும், அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காது. ஆனால் நீங்கள் ஒருமுறை பரிசுத்த ஆவியினால் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படும்போது, நீங்கள் தேவனுடைய ஒரு குமாரனாகவோ அல்லது ஒரு குமாரத்தியாகவோ ஆகிறீர்கள், ""ஒவ்வொரு வார்த்தையும் உண்மையே!” மேலும், அதன்பின்னர், அவர் அந்த நோக்கத்திற்காகவே அதைச் செய்தார். " 221 நான் அன்றொரு நாள் கூறினதுபோல, தேவன் அசைவாடி, சூரியனை பூமியின் மேல் ஒளிவீச செய்தபோது, அவர் அந்தப் பூமியின் கீழ் உள்ள பனைமரங்களையும் மற்றவைகளையும் அறிந்திருந்தார். அவர்...அந்த நேரத்தில் அவைகள் பூமியின் பாகமாயிருந்தன, நீங்களும் அவ்வாறே இருந்தீர்கள். 222 அவர் ஈஸ்டர் காலையில் தேவகுமாரனை எழுப்பி, பரிசுத்த ஆவியை அனுப்பியபோது, அது உயிர்ப்பிக்கும்படியாகவும், நித்திய ஜீவனின் வித்தையும், அது இங்கே இருக்கும் என்று உலகத்தோற்றத்திற்கு முன்னரே அவர் அதை முன்னறிந்திருந்தார். இந்த ஒலிபெருக்கி இன்று மாலை இந்த விதமாகச் செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். நீங்கள் பெற்றுள்ள மனப்பான்மையையே நீங்கள் கொண்டிருப்பீர்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் முடிவற்றவர். நீங்கள் அதை உங்களுடைய மனதினால் கற்பனை செய்து பார்க்க முடியாது, நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், இந்த ஒரு காரியத்தை நான் கூறட்டும், அதே தேவன் இங்கே இந்தப் பிற்பகலில் தம்முடைய ஜனங்களில் நிற்கிறார். 223 நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டாகவோ, பாப்டிஸ்டாகவோ, பெந்தேகோஸ்தேவாகவோ இருந்தாலும், நீங்கள் யாராயிருந்தாலும் சரி, நீங்கள் ஏதோ ஒரு ஸ்தாபனத்தை நம்ப வேண்டாம். காரணம், அவர்கள் ஒரு ஸ்தாபனமாக இருக்க முடியாது...அது அநேக வித்தியாசமான உபதேசங்களால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு கூட்- நீங்கள் தேவனுக்கு, ஒரு தனிப்பட்ட நபராக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு தனிப்பட்ட நபராக இருக்க வேண்டும். தேவன் உங்களோடு இடைபடுகிறார், உங்களுடைய சபையில் அல்ல. நீங்கள் உங்களுடைய சபையில் அல்லது நீங்கள் ஆராதித்துக்கொண்டிருக்கிற சபையில் ஒரு சரியான விதமான வாழ்க்கை வாழ வேண்டும், நீங்கள் இருக்க வேண்டிய அந்த விதமான வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டும். ஆனால் நீங்கள் பாருங்கள், நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால், நீங்கள் அவர்களுடைய வாசல்களுக்குள் கூடப் பிரவேசிக்கக் கூடாதபடிக்கு, அவர்கள் கோட்பாடுகளை, போன்றவற்றை இழுத்துக் கொள்கிறார்கள். ஆகையால் தேவனுடைய வார்த்தை இடைவிடாமல் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது, தேவனால் எப்படி அங்கே உள்ளே வர முடியும்? 224 லூத்தர் அந்த நாளில் இருந்தபோது, இந்த ஞானஸ்நானம் மற்றும் மற்றும் ஆவியின் திரும்பளித்தலைக் குறித்து அவர் எப்படி அறிந்திருந்தார்? செடி அந்தவிதமாக வளரவில்லை. வெஸ்லியும் அதை அறிந்திருக்கவில்லை. இன்றைக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பெந்தேகோஸ்தேக்களும் அறிந்திருக்கவில்லை. அதே காரியம், உங்களை விட்டு உடனே வளருகிறது. அது உண்மை. அது ஒவ்வொரு காலத்திலும் இருந்து வந்துள்ளது, அது எப்பொழுதும் அப்படியே இருக்கும். 225 இது கோதுமை காலம் என்பதை வேதத்தின் மூலம் என்னால் நிரூபிக்க முடியும். நினைவிருக்கட்டும், இந்த மகத்தான எழுப்புதலுக்குப் பிறகு... பெந்தெகொஸ்தே முதற்கொண்டு வேறொரு ஸ்தாபனம் எழும்பவில்லை. அவர்கள் அவ்வாறு இருக்க முடியாது. அது பதரிலிருந்து கோதுமைக்கு செல்கிறது, தானியத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அதுதான் காரணம். பதினைந்து ஆண்டுகள்... வழக்கமாக, மூன்று ஆண்டுகளுக்குப் பின், அவர்கள் எந்த ஒரு எழுப்புதலிலிருந்தும் ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டனர். எந்தச் சரித்திர ஆசிரியரிடமும் கேளுங்கள். ஆனால் இதற்குப் பிறகு எந்த ஸ்தாபனமும் இல்லை. அவர்கள் ஒரு பின்மாரியை எழுப்ப முயன்றனர், ஆனால் அதற்கு என்ன சம்பவித்தது என்பதை நீங்கள் பாருங்கள். அது முடியாது. அது இப்பொழுது கோதுமையாய் உள்ளது. ஆம், ஐயா. இனிமேல் அதைச் சுமப்பவர்களே கிடையாது. அது உண்மையான தானியம். கிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்கு மத்தியில் இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? "226 நாம் இங்கே கீழ்த்தளத்திலிருந்து துவங்குவோம். உங்களில் அநேகர் இருக்கிறபடியால், என்னால் அங்கே அதைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. எத்தனை பேர் என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்கள்? தேவனில் விசுவாசமாயிருங்கள்! இங்குள்ள எத்தனைபேர் அதேவிதமாக அதை விசுவாசித்து, ""நான் அதை என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன்” என்று கூறுகிறீர்கள்? இப்பொழுது நீங்கள் உயிர்ப்பிக்கும் வல்லமையைக் காணும்படியாகத், தேவனாகிய கர்த்தர் இதை எங்களுக்கு அருளுவாராக. அது ஏதோ ஒரு, முக்கியமான அத்தாட்சியாக, அதை நிரூபிக்கிறது. " 227 ஆம், யாராவது, “ஓ, இது அது, இது, அது” என்று கூற முடியும். ஆனால் அது செயல்படட்டும். 228 இப்பொழுது, உங்களைக் குறித்து நான் ஒன்றுமே அறிந்து கொள்வது முற்றிலும் கூடாத காரியம். நீங்கள் அதை அறிவீர்கள். எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு நபரை, என்னால் நோக்கிப் பார்க்க முடிந்தது, அது வெகுதூரத்திலிருந்து வந்துள்ள ஆர்கன்சாஸ் அல்லது அங்கே எங்காவது, பின்னால் சங்கை பிளேயர் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். கூட்டத்தில் உள்ளவர்களில் நான் அறிந்த ஒருவரை மாத்திரமே காண்கிறேன். அது உண்மையென்று தேவன் அறிந்திருக்கிறார். எனவே அது ஏதோ ஒன்றாய் இருக்க வேண்டும்... 229 நான் இங்கே பார்க்க நேர்ந்தது, அங்கே கடைசியில் அமர்ந்துள்ள இந்தச் சிறிய பெண்மணிக்கு, நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆவிக்குரியப் பிரச்சனை உள்ளது. தேவன் உங்களுக்காக அந்த ஆவிக்குரிய பிரச்சனையைச் சரிப்படுத்தி, அதைச் சரிபடுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம். 230 உங்கள் அருகில் அமர்ந்துள்ள மற்றொரு பெண்மணியின் மீது உங்களுடைய கரத்தை வையுங்கள், ஏனெனில் அவளுக்கும் கூட வயிற்றுக்கோளாறு உள்ளது, அவளும்கூட அதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். ஆம். அது சரிதான் சகோதரியே? அது உண்மையானால் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நான் உங்களை அறியேன், என் ஜீவியத்தில் உங்களை ஒருபோதும் கண்டதேயில்லை. இரண்டு கருப்பு நிறமுள்ள பெண்கள். 231 இப்பொழுது, அது என்ன? அவர் என்ன செய்வதாகக் கூறினாரோ, அதைப் போலவே அது உள்ளதல்லவா? சரியாக. "232 இதோ ஒரு பெண்மணி உட்கார்ந்துகொண்டு, இங்கே கீழே நோக்கிப் பார்க்கிறாள்; உட்கார்ந்து கொண்டு என்னையே நோக்கிப் பார்க்கிறாள். அவளுக்கு இருதயக் கோளாறு உள்ளது. தேவன் இருதயக் கோளாறை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அங்கே உட்கார்ந்து, ""நான் அங்குச் செல்ல முடிந்தால் நன்றாக இருக்கும்” என்று ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். அது சரியா? இந்த விதமாக உங்களுடைய கரத்தை அசைத்துக் காட்டுங்கள், அது உண்மை. உங்களுடைய ஜெபத்தில் நீங்கள் என்ன கூறிக்கொண்டிருந்தீர்கள் என்பதை நான் எப்படி அறிந்துகொண்டேன்? " பாருங்கள், அப்படியே விசுவாசியுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விசுவாசிப்பதேயாகும். 233 இங்கே ஒரு பெண்மணி அமர்ந்திருக்கிறாள், அவள் சுகமடையவில்லையென்றால், அவள் உடனே மரித்துப் போவாள். அவளுக்குப் புற்று நோய் உள்ளது. தேவன் புற்று நோயைச் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்களுடைய கரத்தை மெதுவாக உயர்த்தினபடியால், நீங்கள் யாரென்று தேவனால் என்னிடம் கூற முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? திருமதி கன். இப்பொழுது, அது உண்மையென்றால், இந்த விதமாக உங்களுடைய கரத்தை அசைத்துக் காட்டுங்கள், பாருங்கள். சரி. வீட்டிற்குச் செல்லுங்கள், இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்குவார். """நீ விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் கூடும்."" " 234 கறுத்த தொப்பியுடன் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த, இந்தப் பெண்மணியின் மேல் அது பட்டது. அவளுக்கும் புற்று நோய் உள்ளது. தேவன் உங்களைச் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? நான் திருமதி மில்லரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் அந்த ஸ்திரீயை அறியேன், என் வாழ்க்கையில் அவளை ஒருபோதும் கண்டதேயில்லை, அது சரியென்று பரலோகத்திலுள்ள தேவனும் அறிவார். ஆமென். “நீ விசுவாசிக்கக் கூடுமானால்!” 235 இங்கே முனையில் ஒரு கறுப்பு நிற ஸ்திரீ தன்னுடைய தலையைக் குனிந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் படித்துக் கொண்டிருந்தாள், அவள் ஒரு அன்பார்ந்த ஒருவரைக் குறித்து ஆய்ந்து படித்துக் கொண்டிருக்கிறாள், அவள் யாரோ ஒருவருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் உண்மையாகவே, ஜெபிக்க வந்தாள்...அவருக்காக ஜெபிக்கும்படி செய்தாள். அவர் இங்கே இல்லை, அது அவளுடைய கணவன். அது உண்மை. அவள்...அவர் இங்கே இல்லை. அவர் வீட்டில் இருக்கிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, இல்லையா? அது உண்மை. அவர் எலும்பு உட்புழை கோளாறு போன்றவற்றினால் அவதியுற்றிருந்தார். அது உண்மை, அப்படித்தானே? அவர் சரியாகிவிடப் போகிறார். உங்களுடைய விசுவாசம் அதற்காகப் பலமாக இருந்தது. அது உண்மையாயிருக்க வேண்டும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆமென். 236 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை உங்களால் காண முடியவில்லையா? அந்த ஜனங்களிடம் கேளுங்கள். அது கூட்டத்தாரினூடாகச் சென்றுவிட்டது. அவர் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்குள் இருக்கும் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையை நீங்கள் உணருகிறீர்களா? பாருங்கள், நண்பர்களே, அந்தத் தேவன் உங்களைச் சுகமாக்குகிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 237 இப்பொழுது நீங்கள் எனக்காக ஒரு காரியத்தைச் செய்வீர்களா, அதற்கு முன்...? இங்குள்ள எத்தனை பேர் சுகவீனமாயிருக்கிறார்கள்? நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவதை நாங்கள் காணட்டும். இப்பொழுது மணி ஐந்து ஆகப் போகிறது. உங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள், நாம் அப்படியே...இப்பொழுது ஒரு வார்த்தையும் பேசாமல், உங்களுடைய கரங்களை ஒருவர் ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். நீங்கள் ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 238 இங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிற மனிதனுக்கு, தன்னுடைய முதுகில் அந்த வளர்ச்சி உள்ளது. ஐயா, தேவன் உங்களுடைய முதுகிலுள்ள அந்த வளர்ச்சியை எடுத்துப் போடுவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களைச் சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அந்த வாலிப நபர், என்னை நோக்கிப் பார்த்து, அவன் கடந்து செல்லப் போவதாக எண்ணினான். ஐயா, உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அது உண்மை. நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், தேவன் அதை உங்களுக்காக எடுத்துப் போடுவார். 239 அல்லேலூயா! நான் இந்த முழு கூட்டத்தாருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சவாலிடுகிறேன்! உங்களால் கூடுமானால்....உங்களுடைய மனசாட்சியானது அவிசுவாசத்தினால் வாட்டப்பட வேண்டாம், அது குழப்பமடைய வேண்டாம். நீங்கள் மனுஷகுமாரனை, தீர்க்கதரிசனத்தில், நேற்றும், இன்றும், என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தி, தம்முடைய சபைக்கு மீண்டும் திரும்பி வந்துள்ள மனுஷகுமாரனை தீர்க்கதரிசன செய்தியின் ரூபத்தில் காண முடியவில்லையா? இக்காலம் வரையிலும், அது ஒருபோதும் செய்யப்படவில்லை. பார்த்தீர்களா? அதற்கு ஆதாரம் உண்டு. 240 சபை என்பது என்ன? நீங்கள் எப்படி அதற்குள் பிரவேசிக்கிறீர்கள்? நீங்கள் அங்கே இருக்கும்போது, இயேசு கிறிஸ்துவுக்கு இருந்த ஒவ்வொரு காரியமும், நீங்கள் தேவனுடைய குமாரனும், குமாரத்தியுமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் அவராகும்படிக்கு அவர் உங்களைப் போலானார். 241 அதைக் குறித்த காரியம் என்னவெனில், நீங்கள் அதைப் பயன்படுத்தப் பயப்படுகிறீர்கள் அல்லது நீங்கள் அவருடைய வார்த்தையோடு ஒத்துழைக்காமல் இருக்கிறீர்கள். இப்பொழுது, அது ஒரு சிறிதளவு நன்மையையும் செய்யாது, நீங்கள் என்ன செய்தாலும் எனக்குக்—எனக்குக் கவலையில்லை. நீங்கள் அந்த வார்த்தைக்குள் முழுமையாக வரவில்லையென்றால், அது ஒருபோதும் கிரியை செய்யாது. இந்நாளில் அவர் கூறின, வாக்குத்தத்தம் பண்ணின ஒரு காரியம் நடக்கவில்லையென்று யார் என்மேல் குற்றஞ்சாட்ட முடியும்? அப்படியானால் உங்கள் ஸ்தாபனத்தைக் குறித்து என்னிடம் சொல்லாதீர்கள், ஏனென்றால் அது கிரியை செய்யாது. 242 அல்லேலூயா! அவர் இங்கிருக்கிறார் என்பதை, நான் உணருகிறேன். அவர் இங்கே இருக்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இப்பொழுது இங்கே உட்கார்ந்திருக்கிற ஒவ்வொரு நபரையும் சுகப்படுத்தத்தக்கதாகச் சபையில் போதிய உயிர்ப்பிக்கும் வல்லமை உள்ளது என்பதை நான் அறிவேன். உங்களால் அதை விசுவாசிக்க முடிகிறதா? சரி, அப்படியானால், நீங்கள் விசுவாசிப்பீர்களா? "243 வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதில் உங்களுக்கு விசுவாசம் உண்டா? ""வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று இயேசு கூறினார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, இப்பொழுது உங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். உங்களுக்காக ஜெபிக்காதீர்கள். அடுத்த நபருக்காக ஜெபியுங்கள். அவர்கள் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது அமைதியாகவும், பயபக்தியுடனும் இருங்கள். " "244 கர்த்தாவே, இந்த மேடையில் இங்கே நிற்க முடிந்ததற்கு, நான் உமக்கு எவ்வளவு நன்றி கூறுகிறேன் மேலும் மேலும் இன்றைக்கு ஜனங்களுடைய சிந்தனைக்கு மிகவும் முரணாயிருக்கிற ஒரு வார்த்தையைப் பிரசங்கிக்க, அவர்கள் அதை ""மதபேதம்” என்று அழைக்கின்றனர். அவர்கள் அதை ""மரித்தோரின் ஆவியோடு தொடர்பு கொள்ளுதல்"" என்று அழைப்பர், அவர்கள் அதை “பொல்லாத ஆவிகள்” என்று அழைப்பார்கள், அவர்கள் “பெயல்செபூல்” என்று அழைத்தது போல. ஆனால் இந்தப் பிற்பகலில், இந்த மகத்தான கூட்டத்தின் மத்தியில், நீங்கள் பார்க்கும் படி, சரியாகப் பிரசங்கிக்கப்பட்டுள்ளவைகள், அது சத்தியமாயிருக்கிறது என்பதை திரும்பவும் உறுதிப்படுத்தி, நிரூபிப்பது. " 245 தேவனே, இவர்கள் உம்முடைய ஜனங்கள் பிசாசு ஒலிபெருக்கிகளைக் குழப்ப முயன்று, அவன் ஜனங்களுடைய சிந்தனைகளைக் குழப்ப முயன்று, அவர்கள் இதைப் பெற்றுக் கொள்ளாதபடி தடுக்க முயன்றிருக்கிறான். ஆனால் கர்த்தாவே, அவர்கள் எப்படியும் அதைப் பெற்றுக்கொள்வார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர்கள் அதைப் பெற்றுக்கொள்ளும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அதைப் பெற்றுக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்கிறேன். கர்த்தாவே, இந்த விசுவாசிகளுக்கு, உயிர்ப்பிக்கும் வல்லமையை அருளும், அதாவது அவர்கள்...அவர்கள் உம்முடைய வருகையைக் காண ஜீவிக்கவில்லை யென்றால், அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை கடைசி நாட்களில் அவர்களை எழுப்பும். 246 கர்த்தாவே, அவர்கள் செய்து கொண்டிருப்பதில், அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அவர்களுடைய விசுவாசத்தை உயிர்ப்பிக்கும் என்பதை இப்பொழுதே அருளும். ஒரு விசுவாசி ஒரு விசுவாசியின் மீது கரத்தை வைத்திருக்கிறார், ஒரு சரீரத்திற்கு ஒரு சரீரம், ஒரு வல்லமைக்கு ஒரு வல்லமை உள்ளது. அது ஒரு தேவனுடைய குமாரன் அல்லது ஒரு தேவனுடைய குமாரத்தியின் மூலமாக, தேவனுடைய குமாரன் மூலமாக, தேவனுடைய வல்லமையாயுள்ளது. ஓ தேவனே, சாத்தான் இந்த ஜனங்களைக் கட்டவிழ்த்துவிடுவானாக! அடையாளங்காட்டப்பட்ட இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின், உயிர்ப்பிக்கும் பிரசன்னத்தின் வல்லமையினால், இந்தப் பிற்பகல் அவர்கள் சுகமாக்கப்படுவார்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அது அவ்வண்ணமாய் இருப்பதாக! 247 நீங்கள் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தால், ஜனங்களின் மேல் உள்ள உங்களுடைய கரங்கள் அவர்களுக்குள்ளாக உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றுள்ளன. நீங்கள் ஜீவனை அடைந்துவிட்டீர்களா? கிறிஸ்து உங்களுக்கு நிஜமாகிவிட்டாரா? தேவனுடைய வல்லமை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதா? நீங்கள் அந்தச் சபையில், தேவனால் அருளப்பட்ட சபையில் இருக்கிறீர்களா? நீங்கள் அதற்குள் எப்படி இருக்கிறீர்கள், நீங்கள் அதில் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்? உங்களுடைய முழு சிந்தனைகளும், உங்களுடைய முழு சரீரமும், இப்பொழுது கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. கிறிஸ்து ஜனங்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு, தம்மை உயிரோடிருந்து நிரூபித்து, அவர் சோதோமின் நாட்களில் இங்கே இருக்கிறார் என்று நிரூபிக்கிறார். 248 அந்த ஜனங்களின் கரங்களினால், அவர்களுடைய ஜீவியங்கள் விபச்சாரிகளாயிருப்பதிலிருந்து, குடிகாரர்களிடத்திலிருந்தும், வீதியில் உள்ள விபச்சாரிகளிலிருந்தும், உயிர்த்தெழுப்பப்பட்ட அசலான தேவனுடைய பரிசுத்தவான்களிடத்திலிருந்து மாற்றப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய கரங்கள் உங்கள்மேல் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால், எலியாவின் எலும்புகளின் மேல் இருந்த அதே வல்லமையோடு, சபையில் இருக்கின்றனர். அதே வல்லமை உங்களுடைய தோள்களின் மேலும், உங்களுடைய கரங்களின் மேலும், உங்களுடைய தலைகளின் மேலும் இருக்கும், அதே உயிர்ப்பிக்கும் வல்லமை; அவர் இங்கே நின்று கொண்டு, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடிருக்கிறார் என்று நிரூபித்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று தம்மைக் காண்பித்து, அவர் செய்த அதே காரியங்களை இப்பொழுது இங்கே செய்து கொண்டு, அது சத்தியம் என்று நிரூபிக்கிறார். ஆமென்! 249 இப்பொழுது உங்களால் அவரை விசுவாசிக்க முடிகிறதா? உங்கள்மேல் வைக்கப்பட்டுள்ள கரங்கள் தேவபக்தியுள்ள கரங்கள் என்று உங்களால் விசுவாசிக்க முடிகிறதா, இப்பொழுது நம்மை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிற அந்த ஆவியானவர், நம்மை உலகத்திற்கு பைத்தியக்காரத்தனமாகச் செயல்படச் செய்கிறார் என்று உங்களால் விசுவாசிக்க முடிகிறதா, அது அவருடைய உயிர்ப்பிக்கும் வல்லமை என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவருடைய சபையில் இருக்கிறீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், உங்கள் மேல் வைக்கப்பட்டுள்ள கரங்கள் தேவனால் கட்டளையிடப்பட்ட பரிசுத்த கரங்கள் என்று நீங்கள் விசுவாசித்தால்; அப்படியானால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சுகவீனமாயிருக்கிற ஒவ்வொருவரும் உங்களுடைய காலூன்றி எழுந்து நின்று உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். ஓ, கிறிஸ்தவனே, என்ன சம்பவித்துள்ளது என்பதை நீங்கள் உணருகிறீர்களா? 250 அந்தத் தெருவில் உள்ள கோடிக்கணக்கான ஜனங்கள் இன்றைக்கு இந்தத் தெருக்களில் நடந்து செல்கின்றனர், அவர்கள் அணுகுண்டு தீவனமேயன்றி உலகில் வேறொன்றுமில்லை என்பதை நீங்கள் உணருகிறீர்களா? அந்த ஜனங்கள் பாவத்திலும், அக்கிரமங்களிலும் மரித்து, ஜீவியங்களோ கருத்துப் போயிருக்கின்றன என்பதை நீங்கள் உணருகிறீர்களா; எல்லா சபைகளிலும், ஒரு சில சொற்பொழிவுகள் அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட காரியத்தை வைத்துக்கொண்டு அதை மார்க்கம் என்று அழைப்பது எப்படி? "251 நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குள்ளாக எழுப்பப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும், உங்கள் சரீரங்களை உயிர்ப்பித்த ஜீவனுள்ள தேவனுடைய சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும் எங்கே அந்நிய பாஷைகளில் பேசுதலும், அந்நிய பாஷைகளுக்கு அர்த்தம் உரைத்தலும் இருக்கிறதோ, அங்கே இயேசு கிறிஸ்து நமக்கு மத்தியில் வெளிப்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் கண்டு உணர்ந்தீர்களா? ஏன், இதைப் போன்ற ஒரு குழுவில் சுகவீனம் நிற்க முடியாது. உங்களுடைய விசுவாசம் அவரண்டை செல்லட்டும், அவரை விசுவாசியுங்கள்! ""தேவனாகிய கர்த்தரே, என் முழு இருதயத்தோடு நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள், அப்பொழுது நீங்கள் குணமடைவீர்கள். " "252 அந்தச் சரீரத்திற்குள்ளாக வர விரும்புகிற பாவிகள் இங்கிருக்கிறார்களா? உங்களுடைய கரங்களை உயர்த்தி, ""நான் அதற்குள் ஒருபோதும் வரவில்லை, நான் ஒருபோதும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவில்லை, ஆனால், சகோதரன் பிரான்ஹாமே, நான் நிச்சயமாகவே இந்தப் பிற்பகலில் அதை வாஞ்சிக்கிறேன். நீர் எனக்காக ஜெபிப்பீரா?"" என்று கேளுங்கள். உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். வெட்கப்படாதீர்கள், நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறீர்கள். கைகளைப் பாருங்கள்! கரங்களைப் பாருங்கள்! " 253 இப்பொழுது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை விரும்புகிற ஒவ்வொருவரும், அதை விரும்புகிறவர்கள், நீங்கள் எங்கிருந்தாலும், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். "254 இப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெற்ற நீங்கள், அவர்களுக்கு அருகில் நின்று கொண்டு, உங்களுடைய பரிசுத்தமான, அர்ப்பணிக்கப்பட்ட கரங்களை அவர்கள்மேல் வையுங்கள். ""இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசமாயிருந்தால், அது உங்கள் அழிவுள்ள சரீரங்களை மரணத்திலிருந்து ஜீவனுக்கு உயிர்ப்பிக்கிறது.” அது முழு சரீரத்தையும் ஆவியின் கீழ்படிதலுக்குள் கொண்டு வருகிறது. இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை விரும்புகிற அந்த ஜனங்களுக்காக ஒவ்வொருவரும் ஜெபியுங்கள். தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் இப்பொழுதே பரிசுத்த ஆவியினால் நிரப்புவார் என்று நான் விசுவாசிக்கிறேன். " 255 நண்பர்களே, நாம் ஏன் காத்திருக்க வேண்டும்? இந்நாட்களில் ஒன்றில் நீங்கள் அதிக நேரம் காத்திருக்கப் போகிறீர்கள். இதுவே அந்த வேளையாயுள்ளது. இனியும் காத்திருக்க வேண்டாம். நீங்கள் இங்கே இந்த ஆலயத்தில் இருக்கிறீர்கள், அங்கே உங்களுக்கு இரவு முழுவதும் தங்கியிருந்து ஜெபிக்க இடம் இருக்கிறது. 256 அன்புள்ள தேவனே, பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, நீர் பரிசுத்த ஆவியை மீண்டும் அனுப்பி, வீடு முழுவதையும் நிரப்பி, இந்தப் பரிபூரண அடையாளங்காட்டலுக்குப் பிறகு, இந்தப் பிற்பகலில், அதாவது நீர் ஜனங்களோடு, ஜீவித்துக் கொண்டிருக்கிறீர் என்பதைக் காண்பிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.